
‘மாவீரன்’ திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. “டாக்டர்”, “டான்” படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சுனில் & யோகிபாபு
அதன்படி, ‘மாவீரன்’ திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. சுனில் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஏற்கனவே நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இருக்கிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்த மீம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் வரவேற்பு
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே இப்படத்தில் இடம்பெறும் காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்களாக மாற்றி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
வைரல் மீம்
இந்நிலையில் நடிகர் யோகிபாபு பகிர்ந்திருக்கும் மீம் ஒன்று அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது. அவர் பகிர்ந்த மீம் ஒன்றில், வெள்ளையா ஒல்லியா இருந்தாதான் அழகு. எங்கள மாதிரி குண்டா இருந்தா கலாய்க்குறது, உருவ கேலி பண்றது. எங்களோட கஷ்டம் வலி யாருக்குமே புரியாது என்று இடம்பெற்றுள்ளது.
இவர் பகிர்ந்த இந்த மீம்மை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். யோகிபாபுவின் ஆரம்ப கட்ட சினிமா பயணத்தில் அவர் உருவ கேலிக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.