800 கி.மீ. ரேன்ஜ் கொண்ட எம்ஜி கன்வெர்டிபில் கார்!

  • இரண்டு பேர் பயணிக்க கூடிய வகையிலான கன்வெர்டிபில் கார் மாடலை எம்ஜி மோட்டார் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.
  • இந்த கார் ஏற்கனவே அந்நிறுவனம் அறிமுகம் செய்த கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

எம்ஜி மோட்டார் நிறுவனம் ரிட்டன் ‘ஆப் தி லெஜண்ட்’ என்ற தலைப்பில் ஒரு நிமிட வீடியோ டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் எம்ஜி நிறுவனத்தின் புதிய 2-சீட்டர் எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் மாடல் கார் காட்டப்படுகிறது. இந்த கார் சைபர்ஸ்டர் கான்செப்ட்-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் எம்ஜிபி ரோட்ஸ்டர் மாடலை நினைவு கூறும் வகையில் இருக்கும் எனத் தெரிகிறது.

டீசரின் படி எம்ஜி 2 சீட்டர் கன்வெர்டிபில் கார் ப்ரோடக்‌ஷன் ரெடி வடிவில் காட்சி அளிக்கிறது. இந்த காரில் கன்வெர்டிபில் ரூப் ஓபனிங், ரியர் வியூ மிரர்கள், ஓவல் வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி பார், ஸ்வான் டெயில் ஸ்டைல் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருப்பது டீசரில் தெரியவந்துள்ளது. காரின் உள்புறம் யோக் ஸ்டைல் ஸ்டீரிங் வீல், ஸ்போர்ட்ஸ் சீட்கள் உள்ளன.

இவை தவிர புதிய எம்ஜி கன்வெர்டிபில் மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்த காரில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். கான்செப்ட் சைபர்ஸ்டெர் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை மூன்றே நொடிகளில் எட்டிவிடும் என எம்ஜி மோட்டார் தெரிவித்து இருக்கிறது. மேலும் முழு சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் இதே கான்செப்ட்-ஐ தழுவி உருவாகி இருக்கும் எம்ஜி கன்வெர்டிபில் மாடலும் இதே போன்ற செயல்திறன் மற்றும் ரேன்ஜ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிரபார்க்கப்படுகிறது.

இன்னொரு போனஸ் செய்தியாக புகழ்பெற்ற ராயல் என்பீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்க இருக்கிறது என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனம் எப்போது வெளிவரும்?

இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக மேலும் நான்கு ஆண்டுகள் வரை ஆகும் என ஈச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சித்தார்தா லால் தெரிவித்து இருக்கிறார்.

“எலெக்ட்ரிக் வாகன பிரிவு குறித்த திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்த மிக எளிய வழியை தேர்வு செய்ய மாட்டோம். இதன் பின்னணியில் அதிக வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

அந்த வகையில் ராயல் என்பீல்டு பெயரில் முதல் எலெக்ட்ரிக் வாகனம் வெளியாக அதிக ஆண்டுகள் ஆகும் என்றே தெரிகிறது. “தற்போது ஆரம்பகட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சில பிரச்சினைகளை சரி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் இப்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

நகர பயன்பாட்டுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.” “தற்போதைய பிளாட்பார்மில் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் வழங்கும் எண்ணம் இல்லை. இது முழுக்க ராயல் என்பீல்டு மாடலாகவே இருக்கும். அறிமுகமாகும் போது சிறப்பான ஒன்றாக இருப்பதோடு, அனைவரின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் வகையிலஅ இருக்கும்,” என சித்தார்தா லால் தெரிவித்து இருக்கிறார்.