12GB RAM உடன் வெளியானது Vivo Y75s 5G

  • Vivo Y75s 5G ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC சிப்செட், 64 எம்பி டிரிபிள் ரியர் கேமராக்களோடு வெளியாகி இருக்கிறது.

  • நடுத்தர விலைப் பிரிவில் ஒரு ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால் அதற்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

விவோ நிறுவனம் Y சீரிஸ் இன் கீழ் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் சமீபத்திய வெளியீடாக நடுத்தர விலையில் Vivo Y75s 5G வந்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகமாகி உள்ளது. Vivo Y75s 5G ஸ்மார்ட்போனானது 64 எம்பி டிரிபிள் கேமராக்கள், மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC ஆதரவோடு வெளியாகி இருக்கிறது.

அம்சங்கள்

Vivo Y75s 5G அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு கூடிய 6.58 அங்குல IPS LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1080 x 2408 பிக்சல் அடர்த்தி மற்றும் 60Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் FHD+ தெளிவுத்திறனைக் கொண்டிருக்கிறது. Vivo Y75s 5G ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கிறது.
சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள தனியாக micro SD கார்ட் ஸ்லாட் இதில் இருக்கிறது. பிற விவோ போன்களை போலவே, புதிய Vivo Y75s 5G ஆனது OriginOS UI உடனான Android 12 OS மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா

கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், Vivo Y75s 5G ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

பேட்டரி

Vivo Y75s 5G ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 8 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. இணைப்பு ஆதரவுகள் ப்ளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய கனெக்டிவிட்டிகள் இருக்கிறன. ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவும் உள்ளது.

விலை

Vivo Y75s 5G ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 1,899 (சுமார் ரூ.21,777) ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் CNY 2,199 (சுமார் ரூ.25,200) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது ஐரிஸ் மற்றும் ஸ்டாரி நைட் நிறத் தேர்வுகளில் வெளியாகி இருக்கிறது. Vivo Y75s 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. நடுத்தர விலைப்பிரிவு ஸ்மார்ட்போனுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவும் இருப்பதால் எதிர்கால தேவைக்கும் இந்த ஸ்மார்ட்போன் பயனுள்ளதாக இருக்கும்.