பட்ஜெட் விலையில் Top 5 கேமிங் போன்கள்!

காசு நிறைய இருந்தால் தான் கேமிங் போன் வாங்க முடியுமா? பட்ஜெட் விலையில் கேமிங் போன் வாங்க முடியதா? கண்டிப்பாக வாங்கலாம்.
அதிகபட்சம் ரூ.15,000 செலவு செய்தால் போதும் அருமையான கேமிங் போன்களைவாங்கிவிட முடியும். இப்போது ரூ.15,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 கேமிங் போன்களை பார்ப்போம்.

5.ரெட்மி நோட் 10எஸ் (Redmi Note 10S)

நமது பட்டியலில் 5-வது இடத்தில் இருப்பது ரெட்மி நோட் 10எஸ் தான். இந்த ரெட்மி போனை அமேசான் தளத்தில் ரூ.14,868-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் கேமிங் வசதிக்கு மிக அருமையாக பயன்படும். ரெட்மி நோட் 10எஸ் போன் ஆனது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் வருகிறது. குறிப்பாக இந்த போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்,5000 எம்ஏஎச் பேட்டரி, 6.43-இன்ச் டிஸ்பிளே,கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 64எம்பி முதன்மை கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா ஆகிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 13எம்பி கேமராவைக்கொண்டுள்ளது.

அதேபோல் இந்த ரெட்மி போன் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளையும் கொண்டுள்ளது.

4.விவோ டி1 44W (Vivo T1 44W)

இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது விவோ டி1 44W ஸ்மார்ட்போன். பிளிப்கார்ட் தளத்தில் இந்த கேமிங் போனை ரூ.14,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. விவோ டி1 44W போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16எம்பி கேமரா இருக்கிறது.

விவோ டி1 44W போனில் கேமிங் வசதிக்கு தகுந்த சிப்செட் உள்ளது. அதாவது இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. கூடவே ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தகக்து. மேலும் 6.44-அங்குல Full HD plus AMOLED டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 44W பிளாஷ் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

3.இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ (Infinix Note 12 Turbo)

நமது பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ போன். அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட இன்பினிக்ஸ் நோட் 12 டர்போ மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். கேமிங் பயனர்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட இந்த போன் மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. 6.7-அங்குல Full HD plus AMOLED டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, DTS surround sound டூயல் ஸ்பீக்கர் போன்ற சிறப்பான அம்சங்களை வழங்குகிறது.

இந்த போனில் 50எம்பி முதன்மை கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி AI லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

2.போக்கோ எம்4 ப்ரோ 5ஜி (POCO M4 Pro 5G)

இந்த கேமிங் போன் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். பிளிப்கார்ட் தளத்தில் இதன் விலை ரூ.15,049-ஆக உள்ளது. ஆனால் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த போனை வாங்கினால் குறைவான விலைக்கு வாங்கலாம். குறிப்பாக இந்த போன் 50எம்பி + 8எம்பி டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. முன்புறம் செல்ஃபிக்ளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 16எம்பி கேமரா இருக்கிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி சிப்செட் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி சிப்செட் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி கேமிங் பயனர்கள் எதிர்பார்க்கும் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. மேலும் 6.6- அங்குல Full HD plus டிஸ்பிளே, 4ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

1. சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி (Samsung Galaxy F23 5G)

நமது கேமிங்போன் பட்டியலில் முதல் (1) இடத்தை பிடித்துள்ளது சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி. அதாவது தரமான அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி கொண்ட கேலக்ஸி எப்23 5ஜிபோனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி முதன்மை கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக்கொண்டுள்ளது. முன்புறத்தில் 8எம்பி செல்ஃபி கேமரா, 5000mAh பேட்டரி, 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் ஆப் உட்பட அனைத்து ஆப்களையும் தடையில்லாமல் பயன்படுத்த முடியும். மேலும் இந்நிறுவனத்தின் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன்.

இதுல எதை வாங்கப் போறீங்க?