ரூ.8999க்கு அறிமுகமானது மோட்டரோலாவின் பட்ஜெட்போன் Moto E22s

இந்தியாவில் மோட்டரோலா நிறுவனம் Moto E22s என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ.8999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் இந்த மொபைல் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேவைக் கொண்டு இருக்கிறது. இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை தளங்களில் இந்த புதிய போன் அக்டோபர் 22 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் குறைந்த விலையில் இப்படி ஒரு போன் என்பது உண்மையாகவே வரவேற்கத்தக்கது.

கேமரா

16MP முதன்மை கேமரா, 2MP டெப்த் சென்சார் உட்பட இரண்டு பின்பக்க கேமராக்கள் மற்றும் செல்ஃபி எடுக்கவும், வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் பஞ்ச் ஹோல் வடிவமைப்பில் 8MP செல்ஃபி கேமராவும் இந்த போனில் இருக்கின்றன. இந்த கேமராக்கள் மூலம் Full HD வீடியோக்களை எடுக்க முடியும்.

இயங்குதளம்

இந்த புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இயங்குதளத்தைப் பொருத்தவரை, சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. சமீபத்தில் ரூ.10,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ இ32 மாடலின் விலையை விட குறைந்த விலையில் இது அறிமுகமாகி இருக்கிறது.

விலை

Moto e22s போன் ஆனது இந்தியாவில் ரூ.8999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது அக்டோபர் 22 முதல் பிளிப்கார்ட் மற்றும் பிற சில்லறை விற்பனை தளங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 64 ஜிபி என்ற ஒரே வேரியண்ட் இல் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனானது ஆர்க்டிக் ப்ளூ (ortic blue) மற்றும் ஈகோ ப்ளாக் (eco black) ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது.

வடிவமைப்பு

மோட்டோரோலா நிறுவனம் ட்விட்டர் மூலமாக மோட்டோ இ22எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

அம்சங்கள்

Moto e22s ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போனானது நான்கு ஏ53 1.8GHz கோர்கள் கொண்ட MediaTek Helio G37 octa-core CPU மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் ஆதரவுடன் 64 ஜிபி வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 1 டிபி வரை இதன் மெமரியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

டிஸ்ப்ளே

Moto e22s ஸ்மார்ட்போனில் 6.5 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் 1600×720 தெளிவுத்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

கனெக்டிவிட்டி

இதில் Wi-Fi, Bluetooth, 3.5mm ஆடியோ ஜாக், GPS போன்ற கனெக்டிவிட்டிகளுடன் வெளியாகி இருக்கிறது இந்த் மோடோ e22s. இதில் டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

Moto e22s ஸ்மார்ட்போனின் பேட்டரி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் இல் சார்ஜிங் அடாப்டர் மற்றும் யூஎஸ்பி கேபிளும் வழங்கப்படுகிறது. இந்த போனின் எடை 185கிராம் ஆகும்.