Home News Snapdragon 6 Gen 1 சிப்செட் உடன் அறிமுகமானது Moto G Stylus 5G (2023)

Snapdragon 6 Gen 1 சிப்செட் உடன் அறிமுகமானது Moto G Stylus 5G (2023)

Highlights

 

மோட்டோரோலா தனது மூன்றாம் தலைமுறை மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி மொபைலை அமெரிக்காவில் அறிவித்துள்ளது.  இந்த மொபைலின் சிறப்பு என்னவென்றால், குவால்காமின் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்ட  கைபேசிளில் இதுவும் ஒன்றாகும். சாம்சங் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ராவில் காணப்படும் S – Penஐ போலவே சார்ஜிங் போர்ட்டுக்கு அடுத்ததாக ஸ்டைலஸை நிறுவனம் வைத்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ ஃபோனின் விலை, அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

 

Moto G Stylus 5G (2023) விலை மற்றும் விற்பனை விவரங்கள்

விலை

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி (2023) காஸ்மிக் பிளாக் (Cosmic Black) மற்றும் ரோஸ் ஷாம்பெயின் (Rose  Champagne) நிறத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை $399.99 (சுமார் ரூ.33,070)

 

கிடைக்கும் தன்மை

புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி, Amazon.com, Best Buy மற்றும் Motorola.com ஆகியவற்றில் ஜூன் 16 முதல் உலகளவில் விற்பனைக்குக் கிடைக்கும்

 

டிஸ்ப்ளே

இது 6.6-இன்ச் FHD+ (1080×2400 பிக்சல்கள்) LCD திரையை 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது

கேமரா

இந்த போனில் f/1.88 அப்பசர் கொண்ட 50MP பின்புற கேமரா, f/2.2 அப்பசர் கொண்ட 8MP அல்ட்ரா-வைட் கேமரா, மேக்ரோ + டெப்த்ஃபங்க்ஷன், LED ஃபிளாஷ் ஆகியவை உள்ளன. அதே நேரத்தில், செல்ஃபிக்காக f / 2.45 அப்பசர் கொண்ட 16MP முன் கேமரா உள்ளது.

 

சிப்செட்

கைபேசியானது  4nm fabrication செய்த ஆக்டா கோர் ப்ராசஸரான  ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்டைக் கொண்டுள்ளது.  இது மொபைல் பிளாட்ஃபார்ம் (2.2 ஜிகாஹெர்ட்ஸ் x 4 ஏ78-அடிப்படையிலான +1.8ஜிகாஹெர்ட்ஸ் x 4 ஏ55-அடிப்படையிலான க்ரையோ சிபியுக்கள்) அட்ரினோ ஜிபியு மூலம் இயக்கப்படுகிறது.

 

ரேம் & மெமரி

இந்த மொபைல் 4GB / 6GB LPDDR4X ரேம் மற்றும் 128GB / 256GB சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இதன் மெமரி Micro SD card மூலம் 2TB வரை விரிவாக்கக்கூடியது.

 

OS மற்றும் கனெக்டிவிடி

இந்த மொபைல் My UX ஸ்கின் பொருத்தப்பட்ட  Android 13 இல் இயங்குகிறது. இது தவிர, கைரேகை சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 

அளவு

இந்த Moto G Stylus 5G (2023) 162.83x 73.77 x 9.19 மிமீ அளவு மற்றும் 202 கிராம் எடை கொண்டது.

4ஜி பதிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது

மோட்டோ நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் Moto G Stylus (2023) இன் 4G பதிப்பை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த கைபேசியில் 6.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ராசசர், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு உள்ளது.

 

இது தவிர, மோட்டோ ஜி ஸ்டைலஸ் 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா கொண்டுள்ளது. அதே நேரத்தில், அதன் முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது 15W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

 

மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5 ஜி முக்கிய விவரக்குறிப்புகள்