
மோட்டோரோலா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் Moto G32 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியது. இது 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்புத் திறனுடன் வந்துள்ளது. விரைவில் இந்த மொபைலின் இன்னொரு வேரிண்டை மோட்டரோலா நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ், வரவிருக்கும் மார்ச் 22 ஆம் தேதி அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் Moto G32 வேரியண்டானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புத்திறனுடன் கிடைக்கும். முந்தைய வேரியண்டைப் போலவே, இதையும் Flipkart வழியாக வாங்க முடியும். இருப்பினும், ஸ்மார்ட்போனின் சரியான விற்பனை தேதி மற்றும் விலை இன்னும் மர்மமாகவே உள்ளது. பம்ப்-அப் ரேம் மற்றும் சேமிப்பகத்தைத் தவிர, Moto G32 இன் மீதமுள்ள விவரக்குறிப்புகள் பழைய மாடலைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exclusive :
Motorola Moto G32 8GB+128GB variant launching in India on 22nd March, 2023 on Flipkart. pic.twitter.com/dWauck4wOH— Abhishek Yadav (@yabhishekhd) March 19, 2023
டிஸ்ப்ளே
Moto G32 ஆனது FHD+ தெளிவுத்திறனைக் கொண்ட 6.5 அங்குல் டிஸ்ப்ளே மற்றும் மேல்பக்க மையத்தில் அமைந்த பஞ்ச்-ஹோல் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. இது 90Hz புதுப்பிப்பு வீதத்தை வழங்குகிறது. ஸ்மார்ட்ஃபோனில் பக்கவாட்டில் பாதுகாப்பிற்கென கைரேகை ஸ்கேனர் உள்ளது. கூடவே இந்த மொபைலில் IP52 தண்ணீர் தெரிப்பு-தடுப்பு வசதியும் உள்ளது.
கேமரா
இந்த moto G32 மொபைலின் முன்பக்கத்தில் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், செல்ஃபி எடுக்கவும் 16MP செல்ஃபி ஸ்னாப்பர் உள்ளது. கூடவே, 50MP பிரதான சென்சார், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ யூனிட்டோடு கூடிய மூன்று பின்புற கேமரா அமைப்பும் உள்ளது. இதோடு சேர்த்து ஒரு LED ஃப்ளாஷ் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
சிப்செட்
திரையின் கீழ், மோட்டோ ஜி32 ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத் திறன் உள்ள இந்த மொபைலின் சேமிப்புத்திறனை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக விரிவாக்கிக் கொள்ள முடியும்.
பேட்டரி
இந்த மொபைல் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியோடு வெளிவருகிறது. பெரிய பேட்டரி என்பதால் ஒரே சார்ஜில் இந்த மொபைலை அதிக நேரம் வரை உபயோகிக்க முடியும். மேலும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் இதை மிக விரைவாக முழுவதுமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். இது Android 12 OS இல் இயங்குகிறது. இது தவிர இந்த ஸ்மார்ட்போனில் USB-C போர்ட், WiFi, Bluetooth, NFC, dual 4G VoLTE போன்ற கனெக்டிவிட்டியும் உள்ளன.