பட்ஜெட் விலையில் உங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வருகிறது Moto G32 ஸ்மார்ட்போன். மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, இந்த புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வரும் பட்ஜெட் சார்ந்த ஸ்மார்ட்போனாக ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மோட்டோ ஜி32 ஒரு 4G ஸ்மார்ட்போன் மாடலாகும்.
இந்த புதிய மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் டிவைஸில் 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராக்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புதிய ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது.
Moto G32 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
Moto G32 ஸ்மார்ட்போன் ஆனது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.5 அங்குல அளவு உடைய LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 90Hz ரெப்ரெஷிங் ரேட் உடன், 405 ppi மற்றும் 20:9 ரேட்ஸியோ உடன் வருகிறது. பட்ஜெட் விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த டிஸ்பிளே இது என்பது கவனிக்கத்தக்கது.
பட்ஜெட்டில் 1TB வரையிலான ஸ்டோரேஜா?
இந்த புதிய மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் 6GB வரையிலான ரேம், 128GB சேமிப்புத்திறனுடன் வருகிறது. ஸ்மார்ட்போன் பயனர்களின் கூடுதல் ஸ்டோரேஜ்க்காக, micro SD card வழியாக 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் வசதியை வழங்கியுள்ளது. பட்ஜெட் போனில் 1TB ஸ்டோரேஜ் என்பது சிறந்த விஷயம் தான்.
புதிய MOTO G32 போனின் கேமரா அம்சம்
இந்த ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொருத்தவரை புதிய MOTO G32 மூன்று பின்புற கேமராகளுடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் முதன்மைக் கேமரா 50 மெகா பிக்சல் கொண்ட f/1.8 சென்சார் உடன் வருகிறது. இதன் இரண்டாம் கேமரா 8 மெகா பிக்சல் கொண்ட f/2.2 உடைய அல்ட்ரா வைட் சென்சார் உடன் வருகிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போன் மூன்றாவது கேமரா 2 மெகா பிக்சல் f/2.4 உடைய மேக்ரோ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, இந்த சாதனம் 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க ஷூட்டரைப் பயன்படுத்துகிறது.
டர்போ சார்ஜ் அம்சத்துடன் 5,000mAh பேட்டரி
முன்பே சொன்னது போல, இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. பேட்டரி மற்றும் சார்ஜிங் அம்சங்களைப் பற்றிப் பார்க்கையில் இது 30W டர்போ சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதில் பாதுகாப்புக்காகப் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
(finger print scanner) உள்ளது. இந்த போனில் பேஸ் அன்லாக் (face unlock) வசதியும் உள்ளது.
மிரட்டலான அம்சங்களுடன் அறிமுகமான Moto G32
புதிய மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இந்த புதிய டிவைஸ் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு மைக்ரோஃபோன்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் உள்ள இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் v5.2, GPS, A-GPS, GLONASS, NFC, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB Type-C போர்ட் போன்றவை அடங்கும். இந்த புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Moto G32 ஸ்மார்ட்போன் விலை என்ன?
மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போன் இப்போது 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இரண்டு வகை மாடல்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 16,600 விலையில் தொடங்குகிறது. இந்த சாதனம் வரும் வாரங்களில் லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் வெளியிடப்படும் என்று motorola உறுதி செய்துள்ளது. Moto G32 ஸ்மார்ட்போன் மினரல் கிரே, சாடின் சில்வர் மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது.






