அறிமுகமானது Moto G62 5G!


மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் புதிதாக Moto G62 5G என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் 7வது Moto G சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆகும்.

சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி32 என்ற மாடலை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, மோட்டோரோலா நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டு இருக்கிறது. அறிமுக சலுகையாக சில சலுகைகளும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை

மோட்டோரோலா நிறுவனம் இந்த புதிய Moto G62 ஸ்மார்ட்போன் மாடலை 2 ஸ்டோரேஜ் விருப்பத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒரு மாடல், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ரூ. 17,999 என்ற விலையில் அறிமுகமாகி இருக்கிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.19,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சலுகைகள்

இந்த மொபைலை HDFC கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் போது, ரூ. 1,750 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இத்துடன் ரூ. 5,049 மதிப்புள்ள சலுகைகளும் கிடைக்கிறது. இதில், ரூ. 549 மதிப்புள்ள Zee5 வவுச்சர் மற்றும் ரூ. 500 மதிப்புள்ள Myntra வவுச்சர் உட்பட ரிலையன்ஸ் ஜியோவின் தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சில சலுகைகளும் கிடைக்கிறது.

எப்போது வாங்கலாம்?

Moto G62 5G விற்பனை வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி மதியம் 12 மணிக்குத் துவங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை Flipkart வலைத்தளத்தில் வாங்க முடியும். அதேபோல், இந்த புதிய Moto G62 5G ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் வாங்கி பயன்பெறலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

அம்சங்கள்

Moto G62 5G போன் 6.5 அங்குல முழு HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz ரெப்பிரஷ் ரேட் உடன் 240Hz டச் சாம்ப்ளிங் வீதத்துடன் வருகிறது. இந்த சாதனம் Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இயங்குகிறது. இது இந்தியாவில் 12 பேண்ட் 5G இணைப்புடன் செயல்படுகிறது. முன்பே பார்த்தது போல, இது 6GB + 128GB மற்றும் 8GB + 128GB ஸ்டோரேஜ் விருப்பத்தில் வருகிறது. இது ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. இதனால் விளம்பரங்கள், தேவையில்லாத செயலிகள் என எதுவும் இருக்காது. மொபைல் இயக்குவதற்கு மிக எளிமையாக இருக்கும்.

கேமரா மற்றும் பேட்டரி

இந்த போன் 50 MP முதன்மை கேமரா, 8 MP அல்ட்ரா-வைட் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. இதன் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது. இந்த சாதனம் 5,000mAh கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் ஆடியோ டெலிவரிக்காக டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைப்பவர்கள் வரும் ஆகஸ்ட் 19ம் தேதியை குறித்து வைத்துக் கொள்ளவும்.