இந்தியாவில் அறிமுகமாகிறது Moto G72!

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோ ஜி72 (Moto G72) எனும் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இணையத்தில் கசிந்த தகவலின்படி, வரும் செப்டம்பர் மாதம் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மோட்டோ ஜி72

டிப்ஸ்டர் Paras Guglani வெளியிட்ட தகவலின்படி, இந்த புதிய மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மீடியாடெக் சிப்செட்

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் சிப்செட் உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

5000 mAh பேட்டரி

அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே இந்த போன் பெரிய டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரிபிள் ரியர் கேமரா வசதி

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா வசதி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில் 48MP பிரைமரி கேமரா உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி72 மாடல். குறிப்பாகஇந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோ ஜி42

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-அங்குல OLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளோடு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் சிப்செட்

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனில் Dolby Atmos ஆதரவுடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதிகள் உள்ளன. கூடவே குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ ஸ்மார்ட்போன்.

மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு

My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன். மேலும் 4 GB ரேம், 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ், மைக்ரோ SD கார்டு ஸ்லாட் ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ போன்.

50MP முதன்மை கேமரா

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா+ 8MP அல்ட்ரா வைடு கேமரா + 2MP மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 16MP செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட தரமான அம்சங்களை கொண்டுள்ளது.