பட்ஜெட்விலையில் வெளியாகும் மோட்டரோலாவின் 5ஜி போன்!

Highlights

  • மார்ச் 10-ம் தேதி இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும்

கடந்த மாதம் சர்வதேசச் சந்தையில் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த போன் இதுவரை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் வரும் மார்ச் 10-ம் தேதி இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய மோட்டோ ஜி73 5ஜி போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த மோட்டோ ஜி73 5ஜி போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

 

டிஸ்ப்ளே

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல Full HD plus IPS டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. கூடவே 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 1080 X 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சிப்செட்

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 930 சிப்செட் உடன் IMG BXM-8-256 GPU ஆதரவு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவர இருக்கிறது.

 

மெமரி

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது. இதன் மூலம் போனின் சேமிப்புத்திறனை அதிகரித்துக்கொள்ள முடியும்.

 

கேமரா

இந்த மோட்டோ ஜி73 5ஜி மொபைலின் பின்பக்கத்தில் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவு இருக்கிறது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி

மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி.

 

கனெக்டிவிட்டி

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் குறைவான எடையில் வெளியாகும் எனத் தெரிகிறது.