
புதிய மோட்டோ எக்ஸ்40 எனும் ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 15-ம் தேதி மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்யலாம் எனத் தெரிய வந்துள்ளது. முதலில் இந்த போன் சீனாவில் அறிமுகமாகலாம் என்றும், அதன்பின்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கிறது. 5ஜி ஆதரவு, ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, தரமான சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்
டிஸ்பிளே
மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் ஆனது 6.67 அங்குல Full HD Plus டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் வெளிவர இருக்கிறது.
சிப்செட்
விரைவில் அறிமுகமாகும் மோட்டோ எக்ஸ்40 ஒரு 5ஜி போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
மெமரி
8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். கூடவே இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேமரா
மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி tertiary சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதுதவிர செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 32எம்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கும். இதோடு ஒரு LED ப்ளாஷ் ஒன்றும் பின்பக்கத்தில் இருக்கிறது.
பாஸ்ட் சார்ஜிங்
மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போனில் 4450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பல சென்சார் வசதிகளுடன் இந்த புதிய போன் அறிமுகமாக் இருக்கிறது.
கனெக்டிவிட்டி
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத், ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ எக்ஸ்40 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அதேபோல் ஒன்பிளஸ் 5ஜி போன்களுக்க இந்த மோட்டோ டஃப் கொடுக்கும் என்றே கூறலாம்.
விலை
இது ப்ரீமியம் வகையைச் சேர்ந்த மொபைல் ஆகும். இதன் விலை, எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய எந்த விவரங்களும் இதுவரை வெளியாக வில்லை.