உலகின் முதல் 200MP கேமரா மொபைல்!

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் (Motorola Edge 30 Fusion) ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் எட்ஜ் 30 தொடரை லெனோவாவிற்கு சொந்தமான மோட்டரோலா நிறுவனம் விரிவுபடுத்தி இருக்கிறது. இதில் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா என்ற மாடலின் புதிய 12 ஜிபி வேரியண்ட் மாடலை நிறுவனம் இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகின் முதல் 200MP கேமரா ஸ்மார்ட்போன்.!

இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் கர்வுட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இருப்பினும், மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ராவில் உள்ள முக்கியமான சிறப்பம்சமே, இதில் உள்ள 200 மெகாபிக்சல் கேமரா சென்சார் தான்.! இந்தியாவிலும், உலக அளவிலும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra) ஸ்மார்ட்போன் மாடலில் மட்டும் தான் இவ்வளவு பெரிய சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் முதல் 200MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.!

விலை?

முன்னதாக, மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஒரு 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, மோட்டோரோலா ட்விட்டரில் எட்ஜ் 30 அல்ட்ரா மாடலின் 12 ஜிபி வேரியண்ட் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. லெனோவாவுக்குச் சொந்தமான நிறுவனம், இந்த சாதனத்தின் 12ஜிபி ரேம் +256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை ரூ.56,999 அறிமுக விலையில் விற்பனை செய்கிறது. இந்த 12ஜிபி வேரியண்ட் மாடலின் அசல் விலை ரூ.64,999 ஆகும்.

சலுகை

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா இதற்கு முன், ஒரே 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையில் மட்டுமே கிடைத்தது. இதன் விலை ரூ.59,999 ஆகும். ஆனால் Flipkart இல் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன், நீங்கள் இந்த மொபைலை இப்போது இன்னும் குறைந்த விலையில் வாங்க இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன், இதன் முழு சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா டிவைஸ் 6.67 அங்குல வளைந்த pOLED டிஸ்ப்ளேவுடன் 144Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் வருகிறது. இந்த டிஸ்பிளே HDR10+ ஐ ஆதரிக்கிறது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. குறிப்பாக மோட்டோரோலா நிறுவனம் மூன்று வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்களை உறுதி செய்துள்ளது. ஆண்ட்ராய்டு 13,14 மற்றும் 15 நிச்சயமாகக் கிடைக்கும்.