Home News 200MP கேமரா போனுக்கு ரூ 5000 தள்ளுபடி!

200MP கேமரா போனுக்கு ரூ 5000 தள்ளுபடி!

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Moto Days sale எனும் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.54,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 வரை விலைகுறைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

டிஸ்பிளே

இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.67 அங்குல ஃபுல்எச்டி பிளஸ் pOLED curved டிஸ்பிளே வசதியோடு வெளியாகி இருக்கிறது. மேலும் 2400 x 1080 பிக்சல்ஸ், 1250 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

சிப்செட்

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மோட்டோரோலா நிறுவனம் மூன்று வருட ஆண்ட்ராய்டு OS அப்டேட்களை உறுதி செய்துள்ளது. ஆண்ட்ராய்டு 13,14 மற்றும் 15 நிச்சயமாகக் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோ நிறுவனம்.

கேமரா

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 60MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும், உலக அளவிலும் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா (Motorola Edge 30 Ultra) ஸ்மார்ட்போன் மாடலில் மட்டும் தான் இவ்வளவு பெரிய சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் முதல் 200MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.


பேட்டரி

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 4610 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 50 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது

கனெக்டிவிட்டி

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. இதுதவிர, Dolby Atmos ஆதரவு, 10W வயர்லெஸ் பவர் ஷேரிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.