
இந்த மோட்டோரோலா ஜி32 போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ட்ரிபிள் ரியர் கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன் மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தற்போது 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் முன்பு ரூ.16,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.10,499-விலையில் வாங்கக் கிடைக்கிறது.
டிஸ்ப்ளே
மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல Full HD plus டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2400 x 1080 மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சிப்செட்
இந்த மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 610 ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனால் கூடிய விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மெமரி
மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவையும் கொண்டுள்ளது. அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. இதன் மூலம் மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி மொபைலின் சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். மேலும் இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.
கேமரா
மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது/
பேட்டரி
இந்த மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். இதோடு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா.
கனெக்டிவிட்டி
4ஜி எல்இடி, வைஃபை, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன் பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போன். பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன் இது.