

மோட்டோரோலா இந்த ஆண்டின் பிற்பகுதியில் Motorola Razr plus 2023 ஐ அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது . இந்த ஃபோனில் கிளாம்ஷெல்-பாணியில் மடிக்கக்கூடிய வசதி, பெரிய கவர் டிஸ்ப்ளே மற்றும் ஹார்டுவேர் மேம்பாடுகள் இருக்கும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. இப்போது, MySmartPrice தளம், மோடோரோலா நிறுவனம் Motorola Razr Lite என அழைக்கப்படும் மலிவு விலையில் மடிக்கக்கூடிய Razr-ஐ உருவாக்கி வருவதாக பிரத்தியேகமாக தெரிவித்துள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, இந்த போல்டபிள் போன் பிரீமியம் மாடலுக்கு கீழே வெளியாகும். OnLeaks இன் உபயம் மூலம், 5K ரெண்டர்கள் வடிவில் இந்த போனின் படங்கள் மற்றும் சில முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
மோட்டோரோலா ரேஸ்ர் 2023 ரெண்டர்கள், ஃபோனில் கிளாம்ஷெல்-பாணி ஃபோல்டிங் நுட்பத்தைக் கொண்டிருக்கும். மொபைலின் மேல் மையத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட் மற்றும் காட்சியைச் சுற்றி மெலிதான பெசல்கள் உள்ளன. மீடியா நுகர்வு அல்லது கேமிங்கின் போது இது ஒரு நல்ல பார்வை அனுபவத்தை வழங்கும்.
ஒரு சிறிய கவர் திரை உள்ளது. அளவிள் சிறியதாக இருப்பதைக் கொண்டு, இது காட்சி நேரம், அறிவிப்புகள் (notification) மற்றும் incoming call alerts போன்ற குறிப்பிட்ட வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். கவர் டிஸ்ப்ளேவானது OPPO Find N2 Flip அல்லது Samsung Galaxy Z Flip4 ஐ விட ஒப்பீட்டளவில் சிறியது. கவர் டிஸ்ப்ளேக்கு அருகில் இரட்டை கேமரா அமைப்பு மற்றும் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. சுவாரஸ்யமாக, இதன் ஃப்ரேமானது ஆண்டெனா லைன்களோடு வளைந்த ஓரங்களைக் கொண்டுள்ளன.
வெளியாகி இருக்கும் இந்த படங்கள் சோதனை நிலையில், குறைந்த தரத்தில் எடுக்கப்பட்ட படங்கள் ஆகும். தினசரி பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பதாக அறிக்கை தெளிவுபடுத்துகிறது. பார்ப்பதற்கு இவற்றின் வடிவமைப்பு பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இறுதி தயாரிப்பில் சில நுட்பமான மாற்றங்கள் இருக்கலாம். இந்த மொபைல் கருப்பு நிறத்தில் வெளியாகும். ஆனால் துவக்கத்தில் வேறு நிறங்களிலும் வெளியாகலாம்.
இந்த வெளியீடானது முழுவதும் வடிவமைப்பை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்து இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, வெளியான அறிக்கை விவரக்குறிப்புகள் பற்றி எதையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால் வரும் நாட்களில் இதுபற்றி மேலும் பல விவரங்கள் தெரிய வரும் என நம்புகிறோம்.
மோட்டோரோலா ரேசர் 2023 முக்கிய விவரக்குறிப்புகள்
- சிப்செட் – Qualcomm Snapdragon 8 Plus Gen 1
- ரேம் – 8 ஜிபி
- டிஸ்ப்ளே – 6.7 அங்குலம் (17.02 செமீ)
- பின் கேமரா – 64 எம்.பி + 13 எம்.பி
- செல்ஃபி கேமரா – 32 எம்.பி
- பேட்டரி – 4000 mAh








