
மோட்டோரோலா அதன் மடிக்கக்கூடிய Razr சீரிஸின் புதிய தலைமுறையை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியான வதந்திகள் மற்றும் கசிவுகள், மோட்டோரோலா ரேஸ்ர் 2023 சீரிஸில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட போன்கள் இருக்குமெனத் தெரிவிக்கிறது. இந்த சீரிஸில் மூன்று போன்கள் இருக்கலாம். இவை Razr Pro, Razr Lite மற்றும் Razr 40 Ultra என்று கூறப்படுகிறது. ஒரு புதிய கசிவு இப்போது இந்த போல்டபிள் போன்கள் எப்போது வெளியாகலாம் என்று தெரிவிக்கிறது.
Mark your calendars: #MotorolaRazrPro and #MotorolaRazrLite will launch June 1st ? in Madrid ?
— Max Jambor (@MaxJmb) April 17, 2023
டிப்ஸ்டர் மேக்ஸ் ஜாம்போரின் கூற்றுப்படி, Motorola Razr Pro மற்றும் Razr Lite ஸ்மார்ட்போன்கள் ஜூன் 1 ஆம் தேதி ஸ்பெயினின் மாட்ரிட்டில் (Madrid) உலகளவில் அறிமுகப்படுத்தப்படும். பெயர்கள் குறிப்பிடுவது போல, Razr Pro ஒரு பிரீமியம் போல்டபிள் போன் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் Razr Lite குறைந்தவிலை பதிப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.
Motorola Razr Pro, Razr Lite
Motorola Razr 2023 சீரிஸின் விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு என்னவாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் கசிவுகள் உள்ளன. Razr Lite இல் தொடங்கி, இது Samsung Galaxy Z Flip4 மற்றும் OPPO Find N2 போன்ற ஒரு கிளாம்ஷெல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அறிவிப்புகள், அழைப்புகள் மற்றும் சில பயன்பாட்டுக்காக வெளிப்புறத்தில் சிறிய டிஸ்ப்ளே உள்ளது. அதன் கசிந்த ரெண்டர்கள் கவர் டிஸ்ப்ளேவுக்கு அடுத்ததாக இரட்டை கேமரா அமைப்பையும் காட்டுகின்றன. செல்ஃபிக்களுக்கான பஞ்ச்-ஹோல் கேமரா கட்அவுட்டுடன் உள்ளே இருக்கும் டிஸ்ப்ளே பெரியதாக இருக்கும்.
இந்த போல்டபிள் Razr Proவைப் பொறுத்தவரை, ஒரு பெரிய வெளிப்புற டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது வெளிப்புற பேனலில் கிட்டத்தட்ட பாதியை எடுக்கும். இது OPPO Find N2 Flip இன் வெளிப்புற டிஸ்ப்ளேவை விட பெரியதாக இருக்கலாம். இது 3.2-இன்ச் அளவு உள்ளது. மோட்டோரோலா ரேஸ்ர் ப்ரோவும் இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும். ஆனால் வதந்திகள், இதில் பஞ்ச்-ஹோலுக்குப் பதிலாக அண்டர் டிஸ்ப்ளே கேமராவாக இருக்கலாம் என்று கூறுகின்றன. ஆனால் இதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை, எனவே இந்த தகவலைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு காத்திருப்பது நல்லது. விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, இன்னும் உறுதியான தகவல் எதுவும் இல்லை.
வெளியீட்டு தேதி வதந்தி துல்லியமாக இருந்தால், மோட்டோரோலா ரேஸ்ர் ப்ரோ மற்றும் லைட் அறிமுகம் செய்ய இரண்டு மாதங்களுக்கும் குறைவான நேரமே உள்ளது. இதனால் இந்த போல்டபிள் போன்களைப் பற்றி வரும் நாட்களில் கூடுதல் விவரங்கள் வெளியாகக்கூடும்.
Motorola Razr 2023 முக்கிய விவரக்குறிப்புகள்
- சிப்செட் – Qualcomm Snapdragon 8 Plus Gen 1
- ரேம் – 8 ஜிபி
- டிஸ்ப்ளே – 6.7 அங்குலம் (17.02 செமீ)
- பின் கேமரா – 64 எம்.பி + 13 எம்.பி
- செல்ஃபி கேமரா – 32 எம்.பி
- பேட்டரி – 4000 mAh








