Home News இனி லேப்டாப்ல பார்க்கிற வேலையை மோட்டரோலா திங்க் போனிலும் பார்க்கலாம்!

இனி லேப்டாப்ல பார்க்கிற வேலையை மோட்டரோலா திங்க் போனிலும் பார்க்கலாம்!

மோட்டரோலா (Motorola) நிறுவனம் புதிதாக மோட்டோரோலா திங்க் போன் (Motorola ThinkPhone) என்ற புதிய சீரிஸ் ஸ்மார்ட்போனை (smartphone) அறிமுகம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மோட்டரோலாவின் தாய் நிறுவனமான லெனோவா, திங்க்பேட் (ThinkPad Laptop) சீரியஸ் என்ற லேப்டாப் வரிசையைக் கொண்டுள்ளது. இதில் இருக்கும் சிறந்த அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளை இந்த திங்க்போனும் (ThinkPhone) வழங்கும் என்று சமீபத்திய தகவல் தெரிவித்துள்ளது.

டிப்ஸ்டர் சுனூப்பி டெக் என்ற சேனல் மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள ThinkPhone மொபைலின் டிசைன் மற்றும் சில முக்கியமான தகவலை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த திங்க் போன் தட்டையான பிரேம் வடிவமைப்பைக் கொண்டு இருக்கிறது. இடது பக்கத்தில் ஒரு சிவப்பு பட்டனை கொண்டுள்ளது. இந்த சிவப்பு பட்டன் என்ன வேலையைச் செய்யும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இதைப் பார்ப்பதற்கு ஒன்பிளஸ் (OnePlus) போன்களில் வரும் அலர்ட் ஸ்லைடர் பட்டன்களை போல் காட்சியளிக்கிறது.

லேப்டாப் உடன்..

இந்தத் திங்க்போன், லெனோவா நிறுவனத்திற்குச் சொந்தமான ThinkPad லேப்டாப்களுடன் இணக்கம் ஆகும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த போனை லேப்டாப் உடன் எளிதாக இணைக்க வசதியாக கனெக்ட் டிஸ்ப்ளே, மிரர் போன், வெப்கேம் போன்ற வசதிகளைக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், திங்க்பேட்டில் உங்களுக்கு வரும் மெசேஜ்களை பார்ப்பதற்கும் கூடுதல் சேவைகளை போன் மூலம் அணுகுவதற்கு இந்த போன் பல அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆபீஸ் வேலைகளை போனில் அணுக இந்த ஸ்மார்ட்போன் அனுமதிக்கிறது.

கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கடுமையான பேனலுடன் திங்க்போன் (ThinkPhone) என்ற லோகோவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50 எம்பி ப்ரைமரி கேமராவையும் கூடுதலாக அல்ட்ராவைட் கேமரா சென்சார் மற்றும் மேக்ரோ ஷுட்டர் சென்சர்களைக் கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது. இதில் 13 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார் இடம் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிப்செட்

டிப்ஸ்டர் இன் தகவல் படி இந்த திங் போன் சாதனம் குவால்காம் ஸ்னாப் டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி & சார்ஜிங்

இந்த மொபைல் 68W சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் அனுபவத்தையும் ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 5000mah கொண்ட பேட்டரி ஆக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

இது 6.6 அங்குலம் கொண்ட OLED டிஸ்ப்ளே உடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இயங்குதளம்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் இல் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மெமரி

இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் மாடலாக 128 ஜிபி மற்றும் 256 ஜிபி கொண்ட இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி நடக்க இருக்கும் CES 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.