மோட்டரோலாவின் 200MP கேமராபோன்!


Motorola X30 Pro ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் முக்கியமான சிறப்பே இது 200 மெகாபிக்சல் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் முன்புறத்தில் பஞ்ச் ஹோல் கேமராவுடன் வளைந்த கர்வுடு பின்புற பேனல் வடிவமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக திறன் கொண்ட ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டைக் கொண்டிருக்கிறது.

விலை

மோட்டோரோலா எக்ஸ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்புத்திறனுடன் வருகிறது. இதன் சீன விலை CNY 3,699 ஆகும். இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 43,600ல் இருந்து தொடங்குகிறது. அதேபோல், இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட மொபைலின் சீன விலை CNY 4,199. இந்திய மதிப்பின் படி பார்த்தால் இது தோராயமாக ரூ. 49,500 விலையில் வருகிறது. இதன் 12ஜிபி + 512ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட டாப்-எண்ட் மாடலின் சீன விலை CNY 4,499 ஆகும். இது தோராயமாக ரூ. 53,000 விலையை நெருங்குகிறது.

சிறப்பம்சம்

இந்தியா உட்பட மற்ற நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது கிடைக்கும் என்பதை மோட்டோரோலா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இந்தியாவில் இது விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா X30 ப்ரோ டிவைஸ் 6.73 அங்குல முழு HD+ pOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 144Hz ரெப்பிரஷ் ரேட் உடன் வருகிறது. இது இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் (in-display finger print scanner) வருகிறது.

வடிவமைப்பு

இந்த ஸ்மார்ட்போனின் பேனல் அனைத்து பக்கங்களிலும் ஸ்லிம் பெசல்களால் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் இருபுறமும் வளைந்த விளிம்புகளைக் கொண்டுள்ளது மற்றும் முன்பக்கத்தின் மேல் பகுதியின் நடுவே பஞ்ச் ஹோல் கேமரா உள்ளது. இது ஹூட்டின் கீழ், Moto X30 Pro மேம்பட்ட 4nm செயல்முறையின் அடிப்படையில் Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் வருகிறது.

சேமிப்புத்திறன் & கேமரா

இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 512GB வரை UFS 3.1 சேமிப்ப்புத்திறனைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 200 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. மற்ற இரண்டு சென்சார்கள் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராக்களாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்பக்கத்தில், Motorola X30 Pro ஸ்மார்ட்போன் 60 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது.

சார்ஜர் & பேட்டரி

இந்த புதிய Motorola X30 Pro சாதனம் 125W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4,500mAh பேட்டரியோடு வருகிறது. இது வெறும் 7 நிமிடங்களில் பேட்டரியை 50 சதவிகிதம் சார்ஜ் செய்கிறது. 19 நிமிடங்களில் போனை 100 சதவிகிதம் சார்ஜ் செய்துவிடலாம் என்று மோட்டோரோலா கூறுகிறது. இதுமட்டுமின்றி Moto X30 Pro மொபைல் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
சிறந்த கேமரா செயல்பாட்டை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த Motorola X30 Pro சரியான தேர்வாக இருக்கும்.