
மோட்டோவால்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தனது எம்7 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நொய்டாவில் நடந்துவரும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
மோட்டோவால்ட் எம்7
நொய்டாவில் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பல எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகியுள்ளன. அந்த வரிசையில் மோட்டோவால்ட் நிறுவனம் தனது எம்7 என்ற மல்டி பயன்பாட்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
பிரத்யேக வடிவமைப்பு
மோட்டோடவால்ட் நிறுவனம் இந்த எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒவ்வொரு ரைடரின் பயன்பாட்டிற்கு ஏற்றார் போல கஸ்டமைஸ்டு செய்து கொடுக்கும்படி இந்த ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் அதிகமான பொருட்களை எடுத்து செல்லும் வகையில் அதிக ஸ்டிரென்ட்த் மற்றும் லோடு பியரிங் கேப்பாசிட்டியுடன் இதை உருவாக்கியுள்ளது.
வசதிகள்
இந்த எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பின்பக்க சீட் சுலபமாக அகற்றிக்கொள்ளும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில்பெட்டி அல்லது வேறு ஏதேனும் பொருட்களை இணைத்துக்கொள்ளமுடியும். இந்த ஸ்கூட்டரில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பேட்டரியை எடுத்து செல்லும் வசதி இருக்கிறது. இந்த எம்7 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மோட்டோடவால்ட் ஆப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இது ரைடருக்கு ஒரு தடையில்லா அனுபவத்தை வழங்கும். இந்த மோட்டோ வால்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் சப்ஸ்கிரிப்ஷன் முறையிலும் வாங்க முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் மார்கெட்டில் உள்ள இஎம்ஐயை விட குறைவான செலவில் ஸ்கூட்டரை சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.
பேட்டரி
மற்ற நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாரண்டி வழங்கும் நிலையில், இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முதன் முறையாக காலவரையற்ற பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. இந்த மோட்டோவால்ட் எம்7 ஸ்கூட்டரின் பேட்டரி AIS152 2 ம் கட்ட சான்று பெற்றுள்ளது. இந்த பேட்டரி ஸ்வாப்பபிள் பேட்டரியாக இருப்பதால் இதை பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும்.
வளர்ச்சி
இந்நிறுவனம் சமீபத்தில் துபாய் நிறுவனத்தின் மூலம் ரூ16 கோடியை முதலீடாக பெற்றுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் இந்நிறுவனம் தற்போது தனது சேவையை வழங்கி வரும் 100க்கும் அதிகமான நகரங்களின் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.