அறிமுகமாகிறது ரியல்மி நிறுவனத்தின் புதிய 5G போன்!


வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரியல்மி நிறுவனத்தின் Realme 9i 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இது முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Realme 9i 5G ஸ்மார்ட்போனின் லேண்டிங் பேஜ் ஆனது ரியல்மி இந்தியா இணையதளத்தில் வெளியாகிவிட்டது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பையும், அதன் ப்ராசஸரை பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. Realme 9i 5G ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் விலை எப்படி இருக்கும்? இதில் வேறு என்னென்ன அம்சங்கள் இருக்கும்? விரிவாக பார்க்கலாம்!

Appuals வழியாக லீக் ஆன Realme 9i 5G-யின் ரெண்டர்கள் வழியாக, இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்க டிஸ்ப்ளேவில் டியர் டிராப் நாட்ச் (Tear drop notch) வடிவமைப்பு இருப்பதை அறிய முடிகிறது. பின்பக்கத்தை பொறுத்தவரை, இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பார்க்க முடிகிறது. அதில் இரண்டு பெரிய கேமராக்களும், 1 சிறிய கேமராவும், கூடவே ஒரு ஃப்ளாஷையும் பார்க்க முடிகிறது. ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனருடன் கூடிய பவர் பட்டன் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு ஆகிய நிறத் தேர்வுகளில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Realme 9i 5G ஆனது 6.6-அங்குல அளவிலான IPS LCD டிஸ்ப்ளே பேனலை கொண்டிருக்கலாம், இது Full HD+ ரெசல்யூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சம்ப்ளிங் ரேட் போன்ற ஆதரவுகளோடு வரலாம். இந்த லேட்டஸ்ட் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 OS அடிப்படையிலான Realme UI 3.0 மூலம் இயங்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி, இது Dimensity 810 சிப்செட் உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர இது 6 GB வரையிலான ரேம் மற்றும் 128 GB வரையிலான சேமிப்புத்திறனுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 5GB வரையிலான விர்ச்சுவல் ரேம் அம்சத்தையும் எதிர்பார்க்கலாம். சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ள இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டும் இருக்கும்.

கேமராக்களை பொறுத்தவரை, முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெறலாம். பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ் + 4செமீ ஃபோக்கல் லெங்த்-ஐ வழங்கும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா இடம்பெறலாம். இதன் கேமரா செட்டப்பை பார்க்கும் போது, இது லேட்டஸ்ட் ஆப்பிள் ஐபோன்களில் உள்ள கேமராக்களை போலவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதன் கேமரா திறன் எப்படி இருக்கிறது என்பது அறிமுகத்திற்கு பிறகே தெரிய வரும்!

இந்தியாவில் Realme 9i 5G ஸ்மார்ட்போன் ஆனது 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் மற்றும் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் என்கிற 2 ஆப்ஷன்களின் கீழ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் ரூ.15,000-க்கு அறிமுகம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.