இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ ஏ17

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ஏ17 (Oppo A17) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அருமையான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் சில ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும்.

டிஸ்பிளே

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் ஆனது 6.56 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதோடு 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720 x 1600 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

சிப்செட்

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. இந்த போனில் ColorOS 12.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்து இருக்கிறது. இந்த போன் சன்லைட் ஆரஞ்ச் (sunlight orange), மிட்நைட் ப்ளாக் (Midnight black) ஆகிய நிறங்களில் வெளியாகி இருக்கிறது. கூடவே இந்த போன் லெதர் பினிஷ் உடன் வருகிறது. இது போனுக்கு ப்ரீமியம் லுக்கைக் கொடுக்கிறது.

ஸ்டோரேஜ்

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு மைக்ரோ SD மெமரி கார்டை பயன்படுத்தி இதன் சேமிப்புத்திறனை 1TB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். அதேபோல் இதன் ரேம் மெமரியையும் ‘RAM Extention’ வசதி மூலம் இன்னும் 4ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளலாம்.

கேமரா

ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது. பாடல், வீடியோ, ரிங்டோன், நோட்டிபிகேஷன், அலாரம் என அனைத்தின் சத்தத்தையும் 200% வரை அதிகரித்துக் கொள்ளும் ‘Ultra-Volume Mode’ வசதியும் இந்த மொபைலில் இருக்கிறது.

பேட்டரி

புதிய ஒப்போ ஏ17 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்எச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ ஏ17.

குறை

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த போனில் அனைத்து அம்சங்களும் அருமையாக இருக்கிறது. ஆனால் இது 5ஜி போன் கிடையாது. தற்போது 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் 5ஜி போன்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஒப்போ நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.