5,000mAh பேட்டரியுடன் அறிமுகமானது ஒப்போ A57e

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் ஆகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

விலை & விற்பனை

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், தற்போது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.

டிஸ்பிளே

புதிய ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போன் 6.56 அங்குல HD plus IPS டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே 1,612×720 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியோடும் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒப்போ ஸ்மார்ட்போன்.

சிப்செட்

தற்போது அறிமுகம் ஆகி இருக்கும் இந்த ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியொடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் இருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த மொபைலானது 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. அதன் மேல் ஒப்போவின் ColorOS 12.1 பதிக்கப்பட்டு இருக்கிறது.


சேமிப்புத்திறன்

புதிய ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

கேமரா

ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது. முன்பக்கத்தில் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இருக்கிறது.

பேட்டரி

மேலும் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். இதோடு 33W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. கூடுதலாக, கைரேகை சென்சார் வசதியும் இதில் உள்ளது.

கனெக்டிவிட்டி

இந்த ஒப்போ ஏ57இ ஸ்மார்ட்போனில் 5ஜி ஆதரவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 4ஜி, வைஃபை, புளூடூத் வி5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த போனின் எடை 187 கிராம் ஆகும்.