சிடி மாதிரி ஒரு போன்!

பழைய சிடி (CD) போன்ற பேக் பேனல் டிசைன் – இந்த ஒரு விஷயத்துக்காகவே இந்த ஸ்மார்ட்போனை பல பேர் வாங்குவார்கள் என்று ரியல்மி நிறுவனம் நம்புகிறது. அதன்படி இந்த புதிய Realme ஸ்மார்ட்போன் இம்ப்ரெஸ் செய்கிறதா? அதென்ன மாடல்? என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கிறது? எப்போது விற்பனைக்கு வரும்? பார்க்கலாம்!

Realme 9i 5G ஸ்மார்ட்போன் ஆகும். ரியல்மி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆனது இன்று (ஆகஸ்ட் 18) இந்தியாவில் அறிமுகமானது. இதுவொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உடன் கூடிய 6.6 அங்குல டிஸ்ப்ளே, மீடியாடெக் டைமன்சிட்டி 810 SoC, 50 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி போன்ற அம்சங்களைக் கொண்டு இருக்கிறது.

Dynamic RAM Expansion

ஆப் ரெஸ்பான்சிவ்னெஸ்-ஐ (App Responsiveness) மேம்படுத்துவதற்காக இந்த ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம்-ஐ (Virtual RAM) வழங்கும் டைனமிக் ரேம் எக்ஸ்பான்ஷன் தொழில்நுட்பமும் (Dynamic RAM Expansion technology) சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது இன்டர்னல் ஸ்டோரேஜில் இருந்து உங்களால் 5ஜிபி வரையிலான ரேம்-ஐ கடனாக வாங்கி, இதன் ஒட்டுமொத்த ரேம்-இன் அளவை 11 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

அம்சங்கள்

இரட்டை சிம் (நானோ) வசதி கொண்ட Realme 9i 5G ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த Realme UI 3.0 கொண்டு இயங்குகிறது. இது 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 nits ப்ரைட்னஸ்-ஐ வழங்கும் 6.6-அங்குல அளவிலான Full-HD+ (1,080×2,400) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 5G SoC உடனாக 6GB வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமரா

ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமராவுடன் ஒரு போர்ட்ரெய்ட் ஷூட்டர் மற்றும் மேக்ரோ கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக, இதில் 8 மெகாபிக்சல் (f/2.0) கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்டோரேஜ் & பேட்டரி

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை அதிகரித்துக் கொள்ளக்கூடிய 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் Realme 9i 5G ஆனது 5G, 4G LTE, வைஃபை, ப்ளூடூத் v5.2, GPS/AGPS மற்றும் USB Type-C போர்ட் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் Realme 9i 5G ஆனது 18W Quick Charge தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதன் எடை 187 கிராம் மட்டுமே இருக்கும் என உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.

விலை & விற்பனை

இந்தியாவில் Realme 9i 5G ஸ்மார்ட்போனின் ஆரம்பநிலை 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் இருக்கும் போன் ஆனது ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் + 128ஜிபி கொண்ட போன் ஆனது ரூ.16,999 க்கு கிடைக்கும். இந்த லேட்டஸ்ட் Realme ஸ்மார்ட்போனை ஆனது வருகிற ஆகஸ்ட் 24 ஆம் தேதி அன்று மதியம் 12 மணி முதல் Flipkart மற்றும் Realme.com வழியாக வாங்க முடியும். அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1000 என்கிற உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.