நல்ல பெர்பாமென்ஸ் இருக்கிற மொபைலா இருக்கணும்.. அதோட கேமராவும் தரமா இருக்கணும்.. அப்படி ஒரு மொபைல் வாங்கணும்னா இன்னைக்கு அறிமுகமான விவோ மொபைலை தான் வாங்கணும்.
இந்தியாவில் இன்று அறிமுகமான Vivo (விவோ) நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் தான் Vivo V25 Pro! அதன் விலை என்ன? என்னென்ன வசதிகள் இருக்கு? எப்போ வாங்கலாம்? எல்லாத்தையும் பார்க்கலாம்!
விவோ வி25 ப்ரோ (Vivo V25 Pro) ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1300 SoC மற்றும் 12GB வரையிலான ரேம் உடன் வெளியாகும் ஒரு தரமான பெர்ஃபார்மென்ஸ் ஸ்மார்ட்போன். அதே சமயம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவுடன் வரும் 64 மெகாபிக்சல் மெயின் சென்சாரை பேக் செய்யும் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பையும், “தி பெஸ்ட்” என்று கூறுபடியான 32எம்பி செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது. அதாவது – ஒரு தரமான கேமரா போனாகவும் உள்ளது!
அம்சங்கள்
இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது Full HD plus ரெசல்யூஷன் உடனான 6.56-அங்குல AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் 5G நெட்வொர்க்குகளை ஆதரிக்கிறது. ஆண்ட்ராய்டு 12 உடன் Funtouch OS 12 மூலம் இயங்குகிறது. எல்லாவற்றை விடவும் முக்கியமாக இது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது.
‘கலர் சேஞ்சிங்’ (வண்ணத்தை மாற்றும்) பேக் கிளாஸ் பேனலுடன் வரும் Vivo V25 Pro 5G ஸ்மார்ட்போன் ஆனது Full-HD+ (2,376×1,080 பிக்சல்ஸ்) ரெசல்யூஷனை கொண்ட 6.56-அங்குல அளவிலான AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 1300 SoC மற்றும் 12GB வரையிலான ரேம் உடன் இணைந்து இயக்கப்படுகிறது. இதுவொரு இரட்டை சிம் கொண்ட ஸ்மார்ட்போன்.
கேமரா
கேமராக்களை பொறுத்தவரை, Vivo V25 Pro மாடல் ஆனது ட்ரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்டு இருக்கிறது. அதில் f/1.89 லென்ஸ் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு கொண்ட 64-மெகாபிக்சல் சென்சார் + f/2.2 லென்ஸ் கொண்ட 8-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா + f/2.4 லென்ஸ் கொண்ட 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில், Vivo V25 Pro-வில் ஐ ஆட்டோஃபோகஸ் ஆதரவு மற்றும் f/2.45 லென்ஸ் உடன் வரும் 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டி & பேட்டரி
டூயல்-பேண்ட் Wi-Fi (2.4GHz மற்றும் 5GHz), ப்ளூடூத் v5.2, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களைக் கொண்டு இருக்கும் Vivo V25 Pro-வில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் இருக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 4,830mAh பேட்டரியை கொண்டுள்ளது. Vivo நிறுவனத்தின் கூற்றுப்படி இது 190 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.
விலை & விற்பனை
இந்தியாவில் Vivo V25 Pro ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்புத்திறனைக் கொண்ட பேஸிக் வேரியண்ட் ஆனது ரூ.35,999க்கும், இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜை கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட் ஆனது ரூ.39,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விற்பனை & சலுகைகள்
இந்த ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் வழியாகவும், விவோவின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிற ரீடெயில் சேனல்களின் வழியாகவும் வாங்க முடியும். ப்யூர் பிளாக் மற்றும் சைலிங் ப்ளூ என்கிற 2 நிறத் தேர்வுகளில் கிடைக்கும். HDFC கிரெடிட் / டெபிட் கார்டு மற்றும் EMI பரிவர்த்தனைகளின் கீழ் Vivo V25 Pro-வை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.3500 என்கிற தள்ளுபடியை பெற முடியும். கூடுதலாக ரூ.3000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் கிடைக்கும்.






