Home News வேற லெவல் அம்சங்களோடு வெளியானது Vivo X Fold plus

வேற லெவல் அம்சங்களோடு வெளியானது Vivo X Fold plus

விவோ நிறுவனம் Vivo X Fold+ எனும் ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது.

விவோ எக்ஸ் போல்ட் பிளஸ்

விவோ எக்ஸ் போல்ட் பிளஸ் ஸ்மார்ட்போன் இப்போது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே

Vivo X Fold+ ஸ்மார்ட்போன் 8.03 அங்குல AMOLED பிரைமரி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிரைமரி டிஸ்பிளே 2கே ஆதரவு, 1,916 x 2,160 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த போனில் 6.53 அங்குல AMOLED கவர் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இது 1,080 x 2,520 பிக்சல்ஸ் மற்றும் Full HD plus ஆதரவை வழங்குகிறது. மேலும் இந்த விவோ போனில் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் வசதி இருப்பதால் சிறந்த கேமிங் அனுபவத்தைப் பெறமுடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சிப்செட்

Vivo X Fold+ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் உடன் Adreno 730 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறனை வழங்கும். OriginOS Ocean சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

இன்டர்னல் ஸ்டோரேஜ்

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்-ஐ கொண்டுள்ளது இந்த Vivo X Fold+ ஸ்மார்ட்போன். மேலும் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேமரா

Vivo X Fold+ ஸ்மார்ட்போன் 50MP மெயின் கேமரா + 12MP அல்ட்ரா வைடு லென்ஸ் + 12MP போர்ட்ரெயிட் சென்சார் + 8MP periscope கேமரா என்கிற குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றெ 16MP கேமராவுடன் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

Vivo X Fold+ ஸ்மார்ட்போனில் 4730 எம்ஏஎச் பேட்டரியோடு வருகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த விவோ போல்ட் ஸ்மார்ட்போன் 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டி

5ஜி, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.2, என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த Vivo X Fold+ ஸ்மார்ட்போன். மேலும் இந்த மொபைலின் எடை 311 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo X Fold+ போனின் விலை CNY 9,999 (இந்திய மதிப்பில் ரூ.1,15,000) 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo X Fold+ போனின் விலை CNY 10,999 (இந்திய மதிப்பில் ரூ.1,25,000)