இந்தியாவுக்கு வர இருக்கிறது Infinix Hot 12!


இன்பினிக்ஸ் ஹாட் 12 (Infinix Hot 12) ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் ‘பேட்டரி’ மட்டும் தான் வெயிட்டான அம்சம் என நினைத்து விட வேண்டாம். இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களும் கூட வாடிக்கையாளர்களை ஈர்க்க தவறவில்லை. அப்படி என்னென்ன அம்சங்களைக் கொண்டுள்ளது? என்ன விலைக்கு அறிமுகமாகும்? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

Infinix Hot 12 ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் ஆனது, 90Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.82-அங்குல HD+ டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் இது 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பைக் கொண்டிருக்கும்.

இதன் டிஸ்பிளேவில் செல்ஃபி கேமராவை உட்பொதிப்பதற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்சும் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த XOS 10.6 கொண்டு இயங்குகிறது. மேலும் இது ஆக்டா-கோர் MediaTek Helio G85 SoC உடனாக 6GB வரையிலான ரேம் உடன் இணைக்கப்படும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50எம்பி மெயின் கேமரா மட்டுமே தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள சென்சார்கள் – 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் AI லென்ஸ் ஆக இருக்கலாம். முன்பக்கத்தில், இது 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கலாம்.

128ஜிபி அளவிலான சேமிப்புத்திறனுடன் வரும் இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் வழங்குகிறது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனில் டிடிஎஸ் உடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடக்கும் இந்திய அறிமுகத்திற்கு பின்னர், இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படும். இருப்பினும் இதன் இந்திய விலை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனாலும் Infinix Hot 12 ஆனது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உலகளாவிய சந்தைகளில் ஏற்கனவே அறிமுகமாகி விட்டது. நைஜீரியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போனின் 4GB RAM + 128GB சேமிப்புத்திறன் கொண்ட போன் இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.17,200 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தியாவிலும் நாம் இதேபோன்ற விலையை எதிர்பார்க்கலாம். இது லெஜண்ட் ஒயிட் (Legend white), லக்கி கிரீன் (Lucky green), ஆரிஜின் ப்ளூ (Origin blue) மற்றும் ரேசிங் பிளாக் (racing black) என்கிற 4 நிறத்தேர்வுகளில் வெளியாகும்.