Home News 3 நாட்கள் வரை சார்ஜ் தாங்கும் பேட்டரியுடன் அறிமுகமானது மோட்டோ ஜி ப்ளே!

3 நாட்கள் வரை சார்ஜ் தாங்கும் பேட்டரியுடன் அறிமுகமானது மோட்டோ ஜி ப்ளே!

மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி ப்ளே 2023 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.  இந்த போன் 3 நாட்கள் வரை சார்ஜ் தாங்கும் பேட்டரியுடன் அறிமுகமாகி உள்ளது. தற்போது அமெரிக்காவில் மட்டும் வெளியாகி இருக்கும்  இந்த போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும்.

டிஸ்ப்ளே

மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாகப் பார்க்கலாம். புதிய மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 அங்குல எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஎப்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் பின்க்கத்தில் கைரேகை ஸ்கேனர் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது

ஆண்ட்ராய்டு அப்டேட்

மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. ஆனால், இந்த மொபைலுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல வசதி ஆகும்.

மெமரி

புதிய மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. இதன் மூலம் இதன் ஸ்டோரேஜ் திறனை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

கேமரா

இந்த மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போன் 16எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த போனில் ஃபுல் எச்டி வீடியோவை பதிவு செய்ய முடியும்.

பேட்டரி

மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் பேட்டரி லைஃப் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான மோட்டோ ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி

அதேபோல் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5MM ஹெட்ஃபோன் ஜாக், டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி5.0 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த மோட்டோ ஜி பிளே 2023 போனின் எடை 203 கிராம் ஆகும்.

விலை

இந்த புதிய மோட்டோ ஜி பிளே 2023 ஸ்மார்ட்போன் Deep Indigo நிறத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த மொபைலின் விலை அமெரிக்காவில் $169.99 (இந்திய மதிப்பில் ரூ.14,000) ஆக உள்ளது. இந்த போன் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.