புதிய நோக்கியா 110 – 2022 பீச்சர் போன்!


எச்எம்டி குளோபல் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு நோக்கியா 8210 4ஜி எனும் பீச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து தற்போது புதிய நோக்கியா 110 2022 (Nokia 110 2022) எனும் பீச்சர் போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது

நோக்கியா 110 2022 பீச்சர் போன் ஒரு நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன் மென்மையான கீபேட் வசதியை வழங்குகிறது. குறிப்பாக இந்த புதிய நோக்கியா போன் சியான், ரோஸ் கோல்ட் மற்றும் Charcoal நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ கால் ரெக்கார்டிங் வசதி

இந்த போனில் ஆட்டோ கால் ரெக்கார்டிங் விருப்பம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் (32ஜிபி), கலர் டிஸ்பிளே, இன்-பில்ட் டார்ச், 1000 எம்ஏஎச் பேட்டரி, எஃப்எம் ரேடியோ மற்றும் ப்ரீ-லோடட் கேம்கள் என பலவிதமான வசதிகளைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். கூடவே, இந்த போனில் பின்பக்க கேமராவும், இன்பில்ட் மியூசிக் பிளேயரும் இருக்கிறது.

விலை

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நோக்கியா 110 2022 பீச்சர் போனின் விலை ரூ.1,799-ஆக உள்ளது. மேலும் இந்த போன் உடன் ரூ.299 மதிப்புள்ள இயர்போன் இலவசமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நோக்கியா 110 2022 மாடலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்ஸ்டோர்களில் வாங்க முடியும்.

இதற்கு முன் சமீபத்தில் வெளியான நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன் ஆனது விண்டேஜ் ஃபீச்சர் போனால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 4ஜி வோல்ட்இ ஆதரவைக் கொண்டு இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நோக்கியா 8210 4ஜி மாடல் ஆனது சிறிய டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது.
அதாவது 320 x 240 பிக்சல்ஸ், 2.8-இன்ச் QVGA டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டார்ச்லைட் மற்றும் சில அசத்தலான கேம் வசதிகளுடன் இந்த பீச்சர் போன்வெளிவந்துள்ளது. அதேபோல் 48எம்பி ரேம் மற்றும் 128எம்பி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா 8120 4ஜி போன். குறிப்பாக ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை இதன் மெமரியை நீட்டித்துக் கொள்ள முடியும்.

1ஜிகாஹெர்ட்ஸ் Unisoc T107 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன். இதில் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக் அப் கிடைக்கும். இந்த புதிய நோக்கியா போனில் S30+ OS வசதி உள்ளது. மேலும் இந்த போன் பின்பக்கத்தில் VGA கேமரா, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்,ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட்இ, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சிவப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த நோக்கியா 8120 4ஜி பீச்சர் போன், ரூ.3,999-விலையில் அமேசான்இந்தியா மற்றும் நோக்கியா ஸ்டோர்களில் கிடைக்கிறது.