5050mAh பேட்டரியுடன் வெளியாகும் நோக்கியாவின் பட்ஜெட் போன்!

எச்எம்டி குளோபல் நிறுவனம் பட்ஜெட் விலையில் அட்டகாசமான நோக்கியா சி31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நோக்கியாவின் ட்விட்டர் தளத்தில் இந்த போனின் அறிமுகம் குறித்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நம்பர் ஒன்னாக இருந்த நோக்கியா காலத்தோடு சேர்ந்து அப்டேட் ஆகாமல் பின்தங்கி விட்டது. இப்போது தான் சற்று விழித்துக் கொண்டு கஸ்டமர் எதிர்பார்க்கும் சில மொபைல்களை வெளியிட்டு வருகிறது.

இப்போதும் கூட பெரும்பாலும் பீச்சர் போன்களிலேயே அதிக கவனத்தை செலுத்துகிறது. எப்போதாவது தான் ஆண்ட்ராய்டு போனை வெளியிடுகிறது. அப்படி ஒரு போன் தான் இந்த நோக்கியா சி31. இதை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தி இருப்பது இன்னும் சிறப்பு. இது ஒரு 4ஜி மொபைல் ஆகும்.

நோக்கியா சி31

இந்த போன் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை தேதி இன்னும் குறிப்பிடவில்லை. இருந்தபோதிலும் புதிய நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மொபிஅல் ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த நோக்கியா சி31 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

டிஸ்பிளே

நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் ஆனது 6.7அங்குல HD plus டிஸ்பிளே வசதியோடு வெளிவந்துள்ளது. மேலும் 720×1600 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது நோக்கியா இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

சிப்செட்

நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் Unisoc SC9863A1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக சிறிய கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

கேமரா

நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் 13 எம்பி பிரைமரி கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் + ஆட்டோஃபோகஸ் லென்ஸ் என்கிற டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. கூடவேசெல்ஃபிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே முன்பக்கத்தில் 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்.

மெமரி

நோக்கியா சி31 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

பேட்டரி

இந்த நோக்கியா சி31 போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸகேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

இயங்குதளம்

நோக்கியா சி31 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ரூ.11,000-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.