புதிய குறைந்த பட்ஜெட் மொபைல் HMD Aura வெளியானது – முழுவிவரம்

நோக்கியா ஸ்மார்ட்போன்களின் வெற்றிக்குப் பிறகு, தொழில்நுட்ப நிறுவனமான HMD Global கடந்த வாரங்களில் தனது சொந்த பிராண்டிங்குடன் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றொரு புதிய ஸ்மார்ட்போனான HMD Auraவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HMD ஆராவின் முழு விவரங்களையும் இப்போது படிக்கலாம்.

HMD ஆராவின் விவரக்குறிப்புகள்

  • 6.5″ HD+ 60Hz டிஸ்ப்ளே
  • 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு
  • 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
  • 5 மெகாபிக்சல் முன் கேமரா
  • 10W 5,000mAh பேட்டரி

திரை : HMD Aura ஸ்மார்ட்போன் 900 x 1600 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட 6.56 இன்ச் HD + வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளேவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 60Hz புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கும் IPS LCD திரை.

சிப்செட் : இந்த புதிய HMD போன் Android 13 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் Unisoc SC9863A1 Octa core சிப்செட் 1.6GHz கடிகார வேகத்தில் இயங்குகிறது. இந்த ஃபோன் PowerVR GE8322 GPU கிராபிக்ஸ்-ஐ ஆதரிக்கிறது.

நினைவகம் : இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலில் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதன் மூலம் 256GB வரையிலான மெமரி கார்டை மட்டுமே நிறுவ முடியும்.

கேமரா : புகைப்படம் எடுப்பதற்கு HMD ஆரா இரட்டை பின்புற கேமராவை ஆதரிக்கிறது. அதன் பின் பேனலில் 13 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் மற்றும் இரண்டாம் நிலை டெப்த் சென்சார் உள்ளது. இந்த HMD Aura ஃபோன் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 5 மெகாபிக்சல் முன் கேமராவை ஆதரிக்கிறது.

பேட்டரி : பவர் பேக்கப்பிற்காக, HMD Aura ஒரு பெரிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது.

மற்ற அம்சங்கள் : HMD ஆரா என்பது குறைந்த பட்ஜெட் 4G ஃபோன் ஆகும். இது புளூடூத், வைஃபை மற்றும் ஜிபிஎஸ் போன்ற அடிப்படை இணைப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த மொபைல் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

HMD Auraவின் விலை

ஆஸ்திரேலியாவில், இந்த புதிய HMD ஸ்மார்ட்போன் சிங்கிள் மெமரி வேரியண்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மொபைல் 4GB RAM + 64GB சேமிப்பகத்தை ஆதரிக்கிறது. இதன் விலை AUD 180 ஆகும். இந்த விலை இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.9,799 ஆகும். ஆஸ்திரேலியாவில், HMD Aura மொபைலானது  Glacier Green மற்றும் Indigo Black நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. HMD குளோபல் விரைவில் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.