ரூ4,699க்கு நோக்கியாவின் ப்ளிப் போன்!

நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன்மாடலை இன்று அறிமுகப்படுத்த இருக்கிறது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன்

இந்த நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன் ஏற்கனவே சர்வதேசச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தியாவில் அறிமுகமாவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.

இயங்குதளம்

நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது Series 30+ இயங்குதளத்தை கொண்டுள்ளது. இந்த போன் சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன் Unisoc T107 பிராசஸரைக் கொண்டுள்ளது.
நோக்கியா 2660 பிளிப் போன் ஆனது 2.8-அங்குல QVGA பிரைமரி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. கூடவே இந்த போனில் 1.77 அங்குல QQVGA அவுட்சைடு டிஸ்பிளேவும் இருக்கிறது. அதேபோல் இதன் டிஸ்பிளே பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

சேமிப்புத்திறன்

48எம்பி ரேம் மற்றும் 128எம்பி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா பீச்சர் போன். மேலும் கூடுதலாக 32ஜிபி வரை சேமிப்புத்திறனை அதிகரித்துக் கொள்ளும் வசதியையும் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

கேமரா

இந்த நோக்கியா போனில் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட 0.3எம்பி கேமரா வசதி உள்ளது. ஆனால் இதற்கு பதிலாக ஒரு 5எம்பி கேமராவை கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

புளூடூத் வி4.2

வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் எஃப் ரேடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். கூடவே எம்பி3 பிளேயர், புளூடூத் வி4.2, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் போன்ற அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா 2660 பிளிப் பீச்சர் போன்.

விளையாட்டுகள்

90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த விளையாட்டு வசதிகள் இதில் உள்ளன. அதாவது ஸ்னேக், கிராஸி ரோடு, டெட்ரிஸ், ஆரோ மாஸ்டர் உள்ளிட்ட விளையாட்டுகளை கொண்டுள்ளது புதிய நோக்கியா பீச்சர்போன். இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

பேட்டரி

இந்த நோக்கியா 2660 பிளிப் போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். சார்ஜ் பற்றிய கவலை ஒருபோதும் இருக்காது. மேலும் இந்த புதிய நோக்கியா போனின் எடை 123 கிராம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை

இணையத்தில் வெளியான தகவலின்படி, புதிய நோக்கியா 2660 பிளிப் போன் ரூ.4,699-விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.