நோக்கியா போன் பட்ஜெட் விலை தான். ஆனாலும்..

Highlights

  • நோக்கியா நிறுவனம், பட்ஜெட் விலையில் Nokia C12 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
  • ரூ.10,000 விலைப்பிரிவில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 5ஜி ஆதரவை வழங்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் நிலையில், நோக்கியாவின் இந்த ஸ்மார்ட்போன் மிக அடிப்படை அம்சங்களை மட்டுமே கொண்டிருக்கிறது.

3000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியாவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் சி தொடரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2021 இல் அறிமுகம் செய்யப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நோக்கியா சி10 இன் தொடர்ச்சியாக இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 

3டி வடிவமைப்பு, கூடுதல் பாதுகாப்பு

ஸ்மார்ட்போனை பிடித்து பயன்படுத்துவதற்கு வசதியாக, இதன் பின்புற பேனல் 3டி வடிவமைப்புடன் கூடிய உலோக பேனல் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பிற நோக்கியா சி சீரிஸ் மாடல்கள் உடன் ஒப்பிடுகையில் இதில் டஸ்ட், ஈரப்பதம் மற்றும் எதார்த்தமாக கீழே விழுதல் போன்றவைகளில் இருந்து பாதுகாப்பை வழங்கும் தன்மை கொண்டிருக்கிறது.

நோக்கியா சி12 விலை

நோக்கியா சி12 ஸ்மார்ட்போனானது EUR 119 (தோராயமாக ரூ.10,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போனானது சார்கோல், டார்க் சியான் மற்றும் லைட் மின்ட் நிறங்களில் வெளியாகி இருக்கிறது.

 

இந்தியாவில் எப்போது அறிமுகம்?

நோக்கியா சி12 ஸ்மார்ட்போனானது ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது கிடைக்கும் என்பது தொடர்பான அறிவிப்பை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

 

நோக்கியா சி12 சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனானது 6.3 அங்குல எச்டி+ டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. octa-core Unisoc 9863A1 SoC மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் நோக்கியா சி12 இயக்கப்படுகிறது. நோக்கியா பெரும்பாலும் ஸ்டாக் ஆண்ட்ராய்டையே வழங்கும். இதனால் தேவையில்லாத செயலிகள் இருக்காது.  சமீபத்திய பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. மேலும், 2 வருடத்திற்கான செக்யூரிட்டி அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் என நோக்கியா  உறுதி அளித்துள்ளது.

8 எம்பி ஃபோகஸ் ரியர் கேமரா

இந்த நோக்கியா சி12 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எல்இடி ஃப்ளாஷ் உடன் 8 எம்பி ஃபோகஸ் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என 5 எம்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது. நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட், ஆட்டோ எச்டிஆர் மற்றும் டைம்லேப்ஸ் என அம்சங்கள் இந்த கேமராவில் உள்ளது.

 

இந்தியாவில் சந்தேகம் தான்..

இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவலை நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அப்படியே இந்தியாவில் இது வெளியானாலும் அந்தளவிற்கு வரவேற்பை பெறுமா என்பது சந்தேகம் தான். முன்னதாகவே குறிப்பிட்டது போல் ரூ.10,000 விலை பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடுகையில் ஏணைய மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் பல ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.