Home News அதிகபட்ச தள்ளுபடியில் நத்திங் போன் 1

அதிகபட்ச தள்ளுபடியில் நத்திங் போன் 1

Highlights
  • பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் குடியரசு தின சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
  • இதன் தொடர்ச்சியாக பிளிப்கார்ட்டில் Nothing Phone (1) மொபைலுக்கு அதிகபட்ச தள்ளுபடி கிடைக்கிறது.

பிக் சேவிங் டேஸ் விற்பனை

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனை ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20 வரை நடக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 1 ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. சிறந்த மிட் ரேன்ஜ் விலை ஸ்மார்ட்போன்களை பட்டியலிட்டால் அதில் நத்தங் போன் 1க்கு முக்கியமான இடம் இருக்கும். விலைக்கேற்ற அம்சங்கள் மிகச் சிறந்த வகையில் இதில் இருக்கிறது

 

தள்ளுபடி & வங்கிச் சலுகை

நத்திங் போன் 1 அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை இல்லாத குறைந்த விலையில் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையில் தற்போது கிடைக்கிறது. தனித்துவ வடிவமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை ரூ. 37,999. ஆனால், தற்போது ரூ.25,999 என்ற விலைக்கே கிடைக்கிறது. Flipkart குடியரசு தின விற்பனையில் ஐசிஐசிஐ வங்கி கார்ட்களை பயன்படுத்தி நத்திங் போன் 1 வாங்கினால் கூடுதலாக 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் இரண்டுக்கும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. நீங்கள் நத்திங் போன் 1 வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இதுவே சரியான நேரமாகும்.

தள்ளுபடி விவரங்கள்

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், நத்திங் போன் 1 இன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.25,999 என கிடைக்கிறது. கூடுதலாக வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் ரூ.24,999 என்ற விலையில் வாங்கலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆனது தள்ளுபடி விலையில் ரூ.27,999 என கிடைக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.35,499 என கிடைக்கிறது. இந்த அனைத்து வேரியண்டும் ரூ.1000 என்ற கூடுதல் தள்ளுபடியை பெறுகிறது.

 

அப்டேட்கள்

ஆரம்பத்தில், சில சிக்கல்களை சந்திப்பதாக  வாடிக்கையாளர்களிடம்  இருந்து நத்திங் போன் (1) மீது புகார்கள் எழுந்தன. இதை சரி செய்யும் வகையில் நத்திங் போன் (1) தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வடிவமைப்பு, டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி உள்ளிட்டவைகளில் எந்த குறைபாடும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இயங்குதளம்

இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 778G+ SoC மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்களை பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

அம்சங்கள்

டூயல் ரியர் கேமரா, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் என பல மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. 6.5 அங்குல முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு என கெபாசிட்டிவ் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது.

2022ஆம் ஆண்டின் சிறந்த மொபைலைத் தேர்ந்தெடுக்க இங்கே க்ளிக் செய்யவும்!

https://www.indiangadgetawards.com/