நத்திங் போனுக்கு 2வது அப்டேட் வெளியானது!

Highlights

  • Nothing Phone (1) கிளைஃப் லைட்களுடன் மின்னும் வகையிலான புதிய அப்டேட்டை நத்திங் நிறுவனர் கார்ல் பெய் வெளியிட்டுள்ளார்.
  • ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ்1.5 இன் இரண்டாவது அப்டேட் இதுவாகும்.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ்1.5 இன் இரண்டாவது பீட்டா அப்டேட்டை வெளியிடுவதாக நிறுவனர் கார்ல் பெய் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த நத்திங் போன் பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது பீட்டா பயனர்களுக்கான அப்டேட். விரைவில் இது அனைவருக்குமான அப்டேட் ஆக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அப்டேட் அளவு 127 எம்பி ஆகும். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான நத்திங் ஓஎஸ்1.5 இன் இரண்டாவது அப்டேட் இதுவாகும்.

 

என்னென்ன அப்டேட்?

புதிய கிளிஃப் ரிங்டோன் மற்றும் வித்தியாசமான நோட்டிப்பிகேஷன் சவுண்ட்பேக் ஆதரவு. டிஸ்ப்ளேயில் உள்ள மெனுவிற்கான புதிய வால்பேப்பர்கள் தொகுப்பு கிடைக்கிறது. மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் மூலம் டூயல் சிம் கார்ட் பயன்படுத்தும் போது இரண்டு சிம் கார்டுக்கும் இடையே டேட்டா பயன்பாடு எளிதாக மாறிக் கொள்ளும். டிஸ்ப்ளே ஆன் மற்றும் ஆஃப் செய்யும் போது மென்மையான அனிமேஷன் தோற்றம் காட்டப்படும். முழு நத்திங் எக்ஸ் ஆப்ஸ்களும் இப்போது நத்திங் ஓஎஸ் இல் கிடைக்கும். இதுமட்டுமின்றி பல மேம்பாடுகள் இந்த அப்டேட் மூலம் கிடைக்கும்.

தொடரும் அப்டேட்

நத்திங் தற்போதைய இந்த அப்டேட் பீட்டா பயனர்களிடையே சோதிக்கப்பட்டு வருகிறது. பீட்டா சோதனையில் கண்டறியப்படும் பிழைகள் சரிசெய்யப்பட்டு விரைவில் அனைவருக்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நத்திங் நிறுவனம் தொடர்ந்து தங்களது பயனர்களுக்கான அப்டேட்டை வெளியிட்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Nothing Phone (1) அறிமுகமான தினத்தில் இருந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்களில் ஒருசில குறைபாடுகள் குறிப்பட்டாலும் விலைக்கேற்ற அம்சங்கள் இதில் இருக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை.

கட்டுப்பாடு தன்மையில் சில சிக்கல்களை சந்தித்து வருவதாக நத்திங் போன் (1) மீது புகார்கள் எழுந்தது. தொடர்ந்து இதை சரி செய்யும் வகையில் நத்திங் போன் (1) தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. வடிவமைப்பு, டிஸ்ப்ளே, கேமரா, பேட்டரி உள்ளிட்டவைகளில் எந்த குறைபாடும் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

அம்சங்கள்

டூயல் ரியர் கேமரா, 6.5 அங்குல முழு எச்டி+ ஓஎல்இடி டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், HDR10+, 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் பாதுகாப்பு அம்சத்துக்கு என கெபாசிட்டிவ் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

 

4 வருட அப்டேட்

மிகவும் சக்தி வாய்ந்த Qualcomm Snapdragon 778G+ SoC மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. நத்திங் ஃபோன் 1 ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் உடன் வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வருட ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்களை பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.