Home News மீண்டும் துவங்கியது Nothing Phoneக்கான முன்பதிவு

மீண்டும் துவங்கியது Nothing Phoneக்கான முன்பதிவு


நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனான Phone 1ஐ கடந்த ஜூலை 12-ந் தேதி வெளியிட்டது. இந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தியது. அதில் ஒன்று தான் முன்பதிவு.

இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதலில் கிடைக்கும் என அறிவித்து இருந்தது. அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு பாஸ் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. அதனை பெற்றவர்களுக்கு மட்டுமே முதலில் இந்த நத்திங் போன் வழங்கப்பட உள்ளது. இதற்கு ரூ.2,000ஐ முன்பதிவு கட்டணமாக நிர்ணயித்து இருக்கிறது. இந்த 2000 ரூபாய் முன்பதிவு தொகை, போன் வாங்கும்போது அதன் மொத்த விலையில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்ட முன்பதிவி முடிந்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாம்கட்ட முன்பதிவு தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று முதல் நத்திங் போனின் முன்பதிவு மீண்டும் தொடங்கி உள்ளது. ஜூலை 20-ந் தேதி நள்ளிரவு வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் நத்திங் போன் விற்பனைக்கு வர இருக்கிறது.