
மிட்-ரேன்ஜ் விலையில் வெளியான நத்திங் போன் 1-ஐ, ‘ஆப்பிள் ஐபோனிற்கு எதிராக களமிறங்கும் ஒரு ஸ்மார்ட்போன்’ என்றெல்லாம் பில்ட்-அப் செய்ததன் விளைவாக மக்கள் மத்தியில் Nothing Phone 1 மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.
ஆனால், டெலிவரியில் தாமதம், டிஸ்பிளேவில் டெட் பிக்ஸல் மற்றும் க்ரீன் டின்ட் தெரிகிறது, பேக் பேனலில் தூசி இருக்கிறது, ஆடியோ குவாலிட்டி மிகவும் மோசமாக இருக்கிறது, இதன் ஃபேஸ் அன்லாக் அம்சமானது மிகவும் நம்பகத்தன்மை அற்றதாக இருக்கிறது என Nothing Phone 1 ஆனது – பலவகையான விமர்சனங்களுக்கு ஆளானது!
ஸ்டாண்டர்ட் எடிஷன் வெளியான வேகத்தில் ‘லைட்’ எடிஷன் அறிமுகமாகும் என்கிற ஒரு தகவலும் வந்தது. அதாவது ‘நத்திங் போன் 1 லைட்’ ஸ்மார்ட்போன் வெளியாகும் என்கிற தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவல் “முழுக்க முழுக்க ஒரு வதந்தி’ என்று கூறினார் – நத்திங் நிறுவனத்தின் சிஇஓ ஆன கார்ல் பெய்!
Phone 1-ஐ வாங்கியவர்களுக்கு ஒரு பேட் நியூஸ்!
அது என்னவென்றால், நத்திங் போன் 1 ஆனது அவ்வளவு சீக்கிரத்தில் Android 13 ஓஎஸ் அப்டேட்டை பெறாது என்பதே ஆகும். இந்த தகவல் நத்திங் நிறுவனர் ஆன கார்ல் பெய்யிடமிருந்து நேரடியாக வந்துள்ளது. ட்விட்டரில் ஒருவர், நத்திங் போன் 1-க்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் எப்போது வரும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, ‘இப்போதைக்கு வராது’ என்கிற பதிலே ‘பெய்’ இடம் இருந்து கிடைத்துள்ளது!
Android 13 OS அப்டேட் எப்போது வரும்?
நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனிற்கான ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அப்டேட் ஆனது 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரலாம் என்று நம்பப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல!
ஏன் இந்த தாமதம்?
நத்திங் நிறுவனத்திற்கு அதன் போன் 1-இன் வன்பொருளை மேம்படுத்தவே இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. அதன் பின்னரே மென்பொருள் மேம்படுத்தல்கள் நன்றாக வேலை செய்யும். எல்லாவற்றிற்கும் மேலாக, போன் 1 ஆனது நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்பதால், எல்லாமே கொஞ்சம் தாமதமாகவே நடக்கும்.
மூன்று வருட ஓஎஸ் அப்டேட்.. நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்!
நத்திங் போன் (1) ஆனது நத்திங் ஓஎஸ் கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்ட ஒரு கஸ்டம் ஓஎஸ் ஆகும். நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று வருடங்களுக்கான “பெரிய” OS அப்டேட்ஸ் மற்றும் நான்கு ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி அப்டேட்ஸ் கிடைக்கும். அறிமுகமானது முதல் இந்த ஸ்மார்ட்போன் 3 OTA அப்டேட்களை பெற்றுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நத்திங் போன் 1-இன் நிறைகளும், குறைகளும்!
நிறைகள்
- பிரீமியம் பில்ட் குவாலிட்டி
- வித்தியாசமான டிசைன்
- தெளிவான 120Hz OLED டிஸ்ப்ளே
- நல்ல வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் IP53 மதிப்பீடு
- போதுமான பேட்டரி ஆயுள்
- நல்ல முதன்மை கேமரா
குறைகள்
- மற்ற கேமராக்கள் சுமார் தான்; குறிப்பாக குறைந்த வெளிச்சத்தில் நல்ல புகைப்படங்களை எடுக்க போராடுகின்றன
- ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வரவில்லை; தனியாக பணம் கொடுத்து வாங்க வேண்டும்!