Home News இந்தியாவில் Nothing Phone (2)க்கு நிரந்தர தள்ளுபடி! இப்போது இந்த மொபைலை வாங்கலாமா?

இந்தியாவில் Nothing Phone (2)க்கு நிரந்தர தள்ளுபடி! இப்போது இந்த மொபைலை வாங்கலாமா?

Highlights
  • இந்தியாவில் Nothing Phone (2) விலையில் நிரந்தர தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த மொபைலின் 8GB/128GB மாடl ரூ.39,999க்கும், 12GB/256GB ரூ.44,999க்கும், 12GB/512GB ரூ.49,999க்கும் கிடைக்கும்.
  • புதிய விலைக் குறைப்பு ஏற்கனவே ஃபிளிப்கார்ட்டில் அமலுக்கு வந்துள்ளது

இந்தியாவில் நத்திங் ஃபோன் (2) விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பை விட மிகவும் குறைந்த விலையில் போனை வாங்கமுடியும். இந்த ஆண்டு ஜூலையில் இந்த மொபைல் நாட்டில் அறிமுகமானது. Snapdragon 8+ Gen 1 SoC, 50MP இரட்டை கேமரா சென்சார்கள் மற்றும் 120Hz AMOLED டிஸ்ப்ளே போன்ற பிரீமியம் விவரக்குறிப்புகளுடன் வெளியானது. இந்த விலைக் குறைப்பு ஏற்கனவே ஃபிளிப்கார்ட்டில் அமலுக்கு வந்துவிட்டது.

WhatsAppல் எங்களைப் பின்தொடர, இங்கே கிளிக் செய்யவும்

தள்ளுபடிக்குப் பிறகு Nothing Phone (2) விலை

  • நத்திங் ஃபோன் (2) மொபைலின் 8ஜிபி + 128ஜிபி மாடல் ரூ.44,999க்கும்,
  • 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.49,999 மற்றும் 12ஜிபி + 512ஜிபி மாடல் ரூ.54,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
  • அதேபோல் 8ஜிபி+128ஜிபி மாடல் ரூ.39,999க்கும், 12ஜிபி+256ஜிபி மாடல் ரூ.44,999க்கும், 12ஜிபி+512ஜிபி மாடல் ரூ.49,999க்கும் கிடைக்கும்.
  • வங்கி தள்ளுபடிகள் இல்லாமலே இந்த விலையில் மொபைல்களை வாங்க முடியும்.
  • இந்த மொபைலானது Flipkart மற்றும் Croma ஸ்டோர்களில் பிரத்தியேகமாக கிடைக்கிறது.

Nothing Phone (2) விவரக்குறிப்புகள்

  • டிஸ்பிளே: நத்திங் ஃபோன் (2) ஆனது 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்லிங் ரேட், 1,600 நைட்ஸ் பீக் பிக்சல் பிரைட்னஸ், HDR10+ மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 
  • சிப்செட்: மொபைலானது அட்ரினோ GPU உடன் இணைக்கப்பட்ட Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
  • ரேம் மற்றும் சேமிப்பு:  8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி சேமிப்பகம் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது
  • கேமரா : OIS மற்றும் EIS உடன் 50MP Sony IMX890 சென்சார் மற்றும் 50MP Samsung JN1 அல்ட்ரா-வைட் சென்சார் உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு முன்புறத்தில் 32MP ஷூட்டர் உள்ளது.
  • மென்பொருள்:  ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.0 உடன் வெளியாகி இருக்கிறது.
  • பேட்டரி: மொபைலில் 4,700mAh பேட்டரி, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

 

நீங்கள் நத்திங் போன் (2) வாங்கலாமா?

நத்திங் ஃபோன் (2) ஒரு பிரீமியம் மொபைல் ஆகும். புதிய விலையில் இன்னும் பரிசீலிக்கப்படலாம். இந்த கைபேசியானது கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் கூடிய பிரீமியம் 120Hz AMOLED டிஸ்ப்ளேவை வழங்குகிறது. Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது உங்கள் அன்றாட பணிகளை எளிதாக கையாளும் திறன் கொண்ட செயலி ஆகும். இதன் Adreno GPU கேமிங்கை எளிதாகக் கையாளும். OIS ஆதரவுடன் 50MP Sony IMX890 சென்சார் உள்ளது.

ஃபோனின் மூலம் பிரகாசமான ஒளி நிலை மற்றும் குறைந்த வெளிச்சத்திலும் நல்ல படங்களைக் கிளிக் செய்யலாம்  OIS வசதியும் உள்ளது. இதன் மூலம் எடுக்கப்படும் படத்தின் தரம் மேம்படுகிறது. பெரிய 4,700mAh பேட்டரி எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு நாள் முழுவதும் நீடிக்கும். இருப்பினும், நீங்கள் ஒரு சார்ஜரை தனியாக வாங்க வேண்டும். மொத்தத்தில், நத்திங் ஃபோன் (2) இந்த விலையில் வாங்குவதற்கு ஏற்ற ஒரு நல்ல மொபைல் தான்.