Nothing Phone 3 Snapdragon 8s Gen 3 சிப்செட்டில் வெளியாகிறது – விவரங்கள் கசிந்தன

ஒன்பிளஸிலிருந்து பிரிந்த பிறகு கார்ல் பெய் Nothing நிறுவனத்தை தொடங்கினார். முதலில் அந்நிறுவனம் மூலம் Nothing Phone 1, பின்னர் Nothing Phone 2 மற்றும் சமீபத்தில் Nothing Phone 2a ஆகியவற்றை அறிமுகப்படுத்தினர். இரண்டு ஆரம்ப மாடல்களும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டாலும், மூன்றாவது மற்றும் குறைந்த விலை போனான Nothing Phone 2a மொபைலில், MediaTek Dimensity சிப்செட்டைப் பார்க்க முடிந்தது. இப்போது மீண்டும் புதிய மாடல் Nothing Phone 3 பற்றிய விவாதம் தொடங்கியுள்ளது. இந்த விவாதத்திற்கு மத்தியில், Nothing Phone 3 மொபைலானது Qualcomm Snapdragon 8s Gen 3 சிப்செட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று 91Mobiles பிரத்யேக தகவலைப் பெற்றுள்ளது.

நத்திங்குடன் நெருக்கமாகப் பணிபுரியும் தொழில்துறை மூலங்களிலிருந்து இந்தத் தகவலைப் பெற்றுள்ளோம். இதனுடன், இந்த போனின் விலை சுமார் 40 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என்றும் அவர் கூறினார். நிறுவனம் தற்போது பிரீமியம் பிரிவில் நுழையத் திட்டமிட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையிலான பட்ஜெட்டுக்குள் அதன் பயனர் தளத்தை உருவாக்க விரும்புகிறது.

Nothing Phone 3 அறிமுகத்திற்கான ஆயத்தப்பணி தொடங்கியுள்ளது

சமீபத்தில் Nothing நிறுவனத்தின் X சமூகவலை தளக் கணக்கில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளது. அதில் குதிக்கும் தவளை காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவின் மூலம் புதிய நத்திங் போன் 3 அறிமுகம் குறித்த விவாதம் நத்திங் கம்யூனிட்டியில்  தொடங்கியுள்ளது. ஏனென்றால் இதற்கு முன்பு Nothing Phone 1 வெளியீட்டு நேரத்தில் ஒரு கிளியையும், Nothing Phone 2 வெளியீட்டுக்கு முன்பு ஆக்டோபஸையும் வைத்து டீஸ் செய்தது. தவளை குதிக்கும் வீடியோவுடன் நத்திங் போன் 3 பற்றிய விவாதம் தொடங்கியதற்கு இதுவே காரணம்.

 

Nothing Phone 3 வெளியீட்டு காலவரிசை

Nothing Phone 3 குறித்து நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்றாலும், வந்துள்ள கசிவுகளின்படி, நிறுவனம் இந்த போனை ஜூலையில் வெளியிடலாம்.