டெலிவரியில் தாமதம், டிஸ்பிளேவில் டெட் பிக்ஸல் மற்றும் க்ரீன் டின்ட், பேக் பேனலில் தூசி, மோசமான ஆடியோ குவாலிட்டி, நம்பகத்தன்மையற்ற ஃபேஸ் அன்லாக் அம்சம் என நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மீது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில், அடுத்ததாக அறிமுகமாகும் Nothing Phone குறித்த தகவல் வெளியாகி பலரையும் கடுப்பாக்கி உள்ளது.
Light இல்லாமல் வரும் ‘lite’ எடிஷன்!
நத்திங் போன் (1) மாடலில் உள்ள சிக்கல்கள் சரி செய்யப்படுமா என்கிற கேள்விக்கு எந்த பதிலும் கிடைக்காத நேரத்தில் நத்திங் நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போன் ஆன Nothing Phone (1) Lite மாடலை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனும் மிட்-ரேன்ஜ் பட்ஜெட் விலையின் கீழ் தான் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் லைட் எடிஷனில், எல்இடி-களுடன் “ஒளிரும்” பேக் பேனல் இடம்பெறாமல் போகலாம்.
வெளியான ‘leak’ தகவல்களின் அடிப்படையில், நத்திங் போன் (1) லைட் ஆனது 6.55-அங்குல அளவிலான Full HD plus OLED டிஸ்ப்ளேவுடன் வரும். இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை (refresh rate) கொண்டிருக்கும். மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட், டூயல் 50-மெகாபிக்சல் ரியர் கேமராக்கள் மற்றும் 16-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன் (1) லைட் ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நத்திங் போன் (1) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் போன் இந்தியாவில் ரூ.32,999 க்கு கிடைக்கிறது. நத்திங் போன் (1) லைட் ஆனது, இந்தியாவில் தீபாவளி பண்டிகை நேரத்தில் அறிமுகம் செய்யப்படலாம். எப்படி பார்த்தாலும் இது இந்த 2022 ஆம் ஆண்டிற்குள்ளேயே அறிமுகம் செய்யப்பட்டு விடும்.
நத்திங் ஃபோன் 1-க்கு நிறைய ‘ஆல்டர்நேட்டிவ்’ ஸ்மார்ட்போன்கள் உள்ளன. OnePlus Nord 2T ஸ்மார்ட்போன், நத்திங் போன் 1-இன் மிகவும் முக்கியமான “மாற்று” ஸ்மார்ட்போன் ஆகும். இன்னும் சொல்வதென்றால், ஒப்பீட்டளவில் இதன் விலை கொஞ்சம் குறைவு. இதன் 8GB + 128GB ஆப்ஷன் ரூ.28,999 க்கு கிடைக்கிறது. அடுத்ததாக Samsung Galaxy A53 5G உள்ளது. இது ரூ.35,000 என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த போன்களில் ஒன்று.
இவை தவிர, நத்திங் போன் (1) க்கு பதிலாக நீங்கள் மோட்டோரோலா எட்ஜ் 30 (Motorola Edge 30), போக்கோ எஃப்4 5ஜி (Poco F4 5G) மற்றும் ஐக்யூ நியோ 6 (iQOO Neo 6) போன்ற ஸ்மார்ட்போன்களையும் கருத்தில் கொள்ளலாம்.
ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் (பேஸிக் 8GB + 128GB) ரூ.29,999 க்கு கிடைக்கிறது. அதே போல போக்கோ F4 5G ஸ்மார்ட்போனின் 6GB + 128GB ஆப்ஷன் ரூ.27,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக மோட்டோரோலா எட்ஜ் 30-இன் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.27,999 க்கு கிடைக்கிறது.






