
வாட்ஸ்அப் நிறுவனம் தன் பயனர்களுக்கு தேவைப்படும் அம்சங்களையும், முக்கியமானதாக கருதப்படும் வசதிகளையும் ஆய்வு செய்து அதற்கேற்றபடி புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் அதன் உலகளாவிய ஆய்வின் விளைவாகவே புதிய, புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் வெளியான 3 புதிய ப்ரைவஸி அம்சங்களே – சைலன்ட் ஆக WhatsApp Group இல் இருந்து வெளியேறுவது, View Once Message-ஐ Screenshot எடுக்க முடியாதபடி செய்தது & Online-இல் இருப்பதை மறைப்பது போன்ற ப்ரைவஸி அம்சங்களே – அதற்கு சாட்சி!
அந்த வரிசையில் அறிமுகமாகி இருக்கிறது ‘Unread!’
அன்ரீட் (Unread) என்றதுமே ஒரு மெசேஜை படித்துவிட்டு, அதை அன்ரீட் செய்து விடும் அம்சம் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள இந்த புதிய அம்சம் ஆனது நீங்கள் “படிக்காத” மெசேஜ்களை / சாட்களை பில்டர் செய்யும் ஒரு அம்சம் ஆகும்.
இது எப்படி வேலை செய்யும்?
கவனக்குறைவால் அல்லது அதிக எண்ணிக்கையிலான வாட்ஸ்அப் மெசேஜ்களால் ஏதேனும் ஒரு சாட்-ஐ அல்லது மெசேஜை நீங்கள் படிக்காமல் விட்டுவிட்டால் – வாட்ஸ்அப்பின் புதிய Unread chat filter அம்சம் ஆனது – குறிப்பிட்ட மெசேஜ்களை தனியாக பில்டர் செய்து காட்டும்! இதனால், இனிமேல் எந்தவொரு மெசேஜ்களையும் நீங்கள் தவறவிட மாட்டீர்கள்!
யாருக்கெல்லாம் கிடைக்கிறது?
எல்லோருக்கும் கிடைக்கிறது! நேற்றிரவு ‘ட்விட்டர்’ வழியாக அறிவிக்கப்பட்ட இந்த அம்சம் – தற்போது வரையிலாக – ஆண்ட்ராய்டு, வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் அணுக கிடைக்கிறது. அன்ரீட் சாட் பில்டர் அம்சம் ஆனது iOS-இல் அணுக கிடைக்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டு எதையும் கூறவில்லை என்பதால், இது கூடிய விரைவில் ஐஓஎஸ்-க்கும் வரும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்!
பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப்பில் அறிமுகமாகி உள்ள இந்த “அன்ரீட்” அம்சத்தை பயன்படுத்த நீங்கள் பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள் இதோ:
- முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள வாட்ஸ்அப்பை அதன் லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ளவும்.
- பின்னர் வாட்ஸ்அப்பை திறக்கவும்
- மேல் வலது மூலையில் உள்ள Search ஐகானை தட்டவும்.
- புதிதாக Unread என்கிற option இருக்கும்.
- அதை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள படிக்கப்படாத மெசேஜ்கள் / சாட்களை ஒரே வரிசையின் கீழ் காண்பீர்கள்.
- அவற்றை எல்லாம் படித்த பிறகு, சாட் விண்டோவிற்கு திரும்பி செல்ல மேலே காணப்படும் “x” ஐகானை கிளிக் செய்யவும்; அவ்வளவு தான்!
சமீபத்தில் சேர்ந்த 3 ப்ரைவஸி அம்சங்கள்!
முன்னரே குறிப்பிட்டபடி, WhatsApp நிறுவனம் சமீபத்தில் தான் அதன் மூன்று புதிய ப்ரைவஸி அம்சங்களை அறிவித்தது.
01. ‘வியூ ஒன்ஸ்’ விருப்பத்தின் கீழ் அனுப்பப்படும் மெசேஜ்களின் மீதான ஸ்க்ரீன்ஷாட் தடுக்கப்பட்டுள்ளது.
02. நீங்கள் ஒரு க்ரூப்-ஐ விட்டு வெளியேற விரும்பினால், அதை யாருக்கும் நோட்டிஃபைடு செய்யமால் (அட்மின் தவிர்த்து) Exit ஆகலாம்.
03. உங்கள் வாட்ஸ்அப் ஆன்லைன் ஸ்டேட்டஸை குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து மறைக்கலாம்!