மீண்டும் அறிமுகமானது ஓலா S1

  • இந்த ஸ்கூட்டர் 99,999 ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது
  • இந்த ஸ்கூட்டரை ஆகஸ்ட் 31 வரை முன்பதிவு செய்பவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் டெலிவரி தொடங்கும்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரான S1 ஸ்கூட்டரை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்கூட்டர் 99,999 ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை தற்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செப்டம்பர் 2022 முதல் டெலிவரி செய்யப்படும்.

கடந்த ஆண்டு இந்த ஸ்கூட்டரை கடந்த ஆண்டு நிறுத்திய ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டருக்கு கீழ் விற்பனை செய்யப்படும்.

இந்த ஸ்கூட்டரில் 3 KW பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் Eco Mode மூலம் 128 கிலோமீட்டர் செல்லும், Normal Mode மூலம் 101 கிலோமீட்டர் தூரம் செல்லும், Sports Modeல் வைத்து ஓட்டும் போது 95 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.

இந்த ஸ்கூட்டர் ஓலா S1 Pro ஸ்கூட்டரை உருவாக்கிய அதே பிளேட்போர்மில் உருவாகியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் இதை தவிர மியூசிக் பிளேயர் வசதி, நேவிகேஷன், ஆப் வசதி, ரிவர்ஸ் மோட் வசதி போன்றவை உள்ளன. இந்த ஸ்கூட்டரில் MoveOS 3 வசதியும் கொண்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர் Coral Glam, Jet Black, Porcelain White, LiquidSilver, Neo Mint என 5 நிறங்களில் வெளியாகிறது. இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய 499 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரை ஆகஸ்ட் 15 முதல் 31 வரை முன்பதிவு செய்பவர்களுக்கு செப்டம்பர் 1 முதல் டெலிவரி தொடங்கும். இந்த ஸ்கூட்டரை வாங்க மாதம் 2,999 ஆயிரம் ரூபாய் EMI செலுத்தும் வசதியும் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் கூடுதல் வாரண்ட்டி உள்ளது. இதன் இரண்டு வேரியண்ட்களும் அதிக திறன், ரேஞ்சு, Control ரைடிங் மோட், அதிக கலர் ஆப்ஷன்கள், அதே டிசைன் வசதி கொண்டுள்ளது. இதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் Smart Vehicle Control Unit (VCU), Octa Core processor, 3GB RAM, ஹை ஸ்பீட் கனெக்டிவிட்டி, 4G, WiFi வசதி, ப்ளூடூத் வசதி போன்றவை உள்ளன.