கடந்த வாரம் இந்தியாவில், போக்கோ (POCO) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனாக போக்கோ சி50 (POCO C50) மாடல் வெறும் ரூ.6499 க்கு அறிமுகமானது. அதனை தொடர்ந்து இந்நிறுவனத்தின் கீழ் மற்றொரு சி-சீரிஸ் (C-Series) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது, அது போக்கோ சி55 (POCO C55) ஸ்மார்ட்போன் ஆகும்.
போக்கோ சி55 ஆக வரும் ரெட்மி 12சி!
போக்கோ சி55 ஸ்மார்ட்போன், கடந்த 2022 டிசம்பரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 12சி (Redmi 12C) ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது ரெட்மி சி12 ஸ்மார்ட்போன் அதே பெயரின் கீழ் இந்தியாவில் அறிமுகம் ஆகாமல், போக்கோ பிராண்டிங்கின் கீழ் போக்கோ சி55 ஆக வெளியாகும்.
எல்லாமே ரீ-பிராண்டட் தான்
போக்கோ சி55 மட்டுமல்ல சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ சி50 கூட ஒரு ரீபிராண்டட் வெர்ஷன் தான். இன்னும் சொல்லப்போனால் போக்கோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட எல்லா சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே ரெட்மி ஸ்மார்ட்போன்களின் ரீபிராண்டட் வெர்ஷன்களே ஆகும். இதில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், போக்கோ சி சீரீஸின் கீழ் வரும் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன அம்சங்களை வழங்கும் என்பதை நம்மால் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். அப்படியாக விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ சி55 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
அம்சங்கள்
இதன் அம்சங்கள் ரெட்மி 12சி ஸ்மார்ட்போனுடன் ஒற்றுப்போகும். ஆக போக்கோ சி55 ஆனது 6.71 அங்குல அளவிலான எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது 720 x 1650 pixel அடர்த்தியும், 500 நிட்ஸ் பிரகாசத்தையும் கொண்டு இருக்கும்.
ப்ராஸசர்
இந்த போக்கோ சி55 ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ராசஸர் மூலம் இயங்கும். இதே சிப்செட் தன ரெட்மி நோட் 9, ரியல்மி நார்சோ 20, மைக்ரோமேக்ஸ் இன் நோட் 1, மோட்டோ ஜி31 போன்ற ஸ்மார்ட்போன்களிலும் உள்ளது. இது மிகவும் பொதுவான ஒரு மிட்-ரேன்ஜ் சிப்செட் (Mid-range Chipset) ஆகும்!
கேமரா
கேமராக்களை பொறுத்தவரை போக்கோ சி55 ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். அதில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் இருக்கும். இதன் ரியர் கேமரா செட்டப்பில் எல்இடி ஃபிளாஷும் அடக்கம். முன்பக்கத்தை பொறுத்தவரை 5 எம்பி செல்ஃபி கேமரா இருக்கும்.
பேட்டரி
இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது மற்றும் அது 10W சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. சார்ஜிங் மற்றும் டேட்டா டிரான்ஸ்பர்களுக்காக மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் உள்ளது.
விலை
ரெட்மி 12சி ஸ்மார்ட்போனை போலவே போக்கோ சி55 ஸ்மார்ட்போனும் கூட மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது 4ஜிபி + 64ஜிபி, 4ஜிபி + 128ஜிபி, மற்றும் 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட்களில் வெளியாகும். இவற்றின் விலை நிர்ணயம் முறையே ரூ.8,499, ரூ.9,499 மற்றும் ரூ.10,999 ஆக இருக்கலாம்!
கனெக்டிவிட்டி
இந்த போக்கோ சி55 போனில் 3.5mm ஆடியோ ஜாக், வை-பை, ப்ளூடூத் 5.1, FM ரேடியோ, மைக்ரோ USB 2 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் இருக்கும்.








