Home News அதிகபட்ச அந்துது மதிப்பெண்களைப் பெற்றது ஒன்ப்ளஸ் 11!

அதிகபட்ச அந்துது மதிப்பெண்களைப் பெற்றது ஒன்ப்ளஸ் 11!

OnePlus நிறுவனம் அதன் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) போனை வருகின்ற பிப்ரவரி 7, 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால், இந்த போனைப் பற்றிய லீக் தகவல்கள் மற்றும் வதந்திகள் இப்போதே இணையத்தை ஆக்கிரமிக்கத் துவங்கியுள்ளன.

அந்த வரிசையில், இப்போது OnePlus 11 போன் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகி இருக்கிறது. OnePlus 11 போன் சாதனம் இன்று AnTuTu தரப்படுத்தல் தளத்தில் (AnTuTu benchmarking scores) காணப்பட்டது. இதில் OnePlus 11 போனின் சில முக்கிய விபரங்களைத் தளம் வெளிப்படுத்தியுள்ளது. கூடுதலாக, OnePlus 11 இதுவரை மற்ற போன்கள் வாங்காத அதிகபட்ச மதிப்பெண்களை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அது போன வாரம்

ஸ்மார்ட்போன்களின் வரலாற்றில் அதிக AnTuTu மதிப்பெண்களைப் பெற்ற முதல் உலக டாப் ஸ்கோரிங் சாதனமாக OnePlus 11 போன் இப்போது மாறியுள்ளது. கடந்த வாரத்தின் முடிவில் iQOO 11 உலகின் அதிக மதிப்பெண் பெற்ற ஆண்ட்ராய்டு போனாக இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது ரேட்டிங்கில் OnePlus 11 தனது ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது.

புளூடூத் SIG

இந்த புதிய OnePlus 11 மொபைல் சமீபத்தில் புளூடூத் SIG சான்றிதழ் தளத்திலும் முக்கிய விவரத்துடன் காணப்பட்டுள்ளது. OnePlus 11 ஸ்மார்ட்போன் (Smartphone) 1341080 மதிப்பெண்களை பெற்று முன்னிலையில் இருக்கிறது.

நம்பர் 1

சமீபத்தில் iQOO 11 பெற்றிருந்த ஹை-ஸ்கோர் மதிப்பெண் 13,23,820 என்பது குறிப்பிடத்தக்கது. OnePlus 11 ஆனது 295159 என்ற CPU மதிப்பினையும், 574508 என்ற GPU மதிப்பெண், 268112 என்ற MEM மதிப்பெண் மற்றும் 203301 என்ற UX மதிப்பெண்களையும் பெற்று இன்றைய தேதியில் உலகத்தின் சக்தி வாய்ந்த ஆண்ட்ராய்டு போனாக முன்னிலையில் இருக்கிறது.

அம்சங்கள்

OnePlus 11 ஆனது சமீபத்திய முதன்மையான Snapdragon 8 Gen 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16GB LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது என்பதை இந்தப் பட்டியல் உறுதிப்படுத்துகிறது. கூடுதலாக, இந்த போன் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடைசியாக, ஒன்பிளஸ் 11 ஆனது ஆண்ட்ராய்டு 13 ஐ அவுட் ஆப் தி பாக்சில் வழங்கும் என்று பட்டியல் தெரிவிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் OS ஐப் பற்றிப் பேசுகையில், OnePlus 11 ஆனது Bluetooth SIG சான்றிதழ் வலைத்தளத்திலும் காணப்பட்டது. இது அதன் உலகளாவிய மற்றும் இந்திய மாறுபாடு பிராண்டின் சமீபத்திய தனிப்பயன் ஸ்கின் ஆனா OxygenOS 13 உடன் அனுப்பப்படும் என்பதை அந்த பட்டியல் தெளிவாக காண்பித்துள்ளது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

இந்த் மொபைலின் அடிப்படை வேரியண்ட் ரூ. 43,490 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.