
துரதிர்ஷ்டவசமாக ஜெர்மனியில், இனி Oppo மற்றும் OnePlus ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்குக் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம்.. Nokia. நோக்கியா நிறுவனம் என்பது இங்கு HMD குளோபல் நிறுவனத்தை குறிக்கவில்லை. Nokia ஸ்மார்ட்போன் பிராண்டின் உரிமையாளராக பினிஷ்டு உபகரணங்களை சப்ளை செய்யும் நோக்கியா தான் இதற்கு காரணம்.
Oppo மற்றும் OnePlus மீது ஸ்மார்ட்போன் பிராண்டின் உரிமையாளரான நோக்கியா நடத்தி வரும் காப்புரிமை வழக்கு அடிப்படையில் Oppo மற்றும் OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு இப்போது ஜெர்மனியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் நேற்று முதல் ஜெர்மனியில் அதன் விற்பனையை நிறுத்திவிட்டன என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் படி, இப்போது இந்த இரண்டு பிராண்ட்களின் புதிய சாதனங்கள் கிடைக்காது.
நீங்கள் Oppo மற்றும் OnePlus இன் இணையதளங்களின் ஜெர்மன் பதிப்புகளை ஆன்லைனில் வாங்க முயற்சி செய்தால், உங்களால் புதிய போன்களை இப்போது வாங்க முடியாது. இந்த தடை புதிய விற்பனைக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே ஜெர்மனியில் வாங்கிய Oppo மற்றும் OnePlus போன்களை இது எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பிராண்டுகளின் போன் உங்களிடம் இருந்தால், உங்கள் சாதனம் வழக்கம் போல் வேலை செய்யும். ஜெர்மனியில் விற்கப்படும் புதிய போன்களுக்கு மட்டுமே இந்த தடை பொருந்தும். சரி, இப்போது Oppo மற்றும் OnePlus போன்களின் விற்பனை என்ன காரணத்தினால் நிறுத்தப்பட்டது என்றால், முக்கியமாக, Oppo மற்றும் OnePlus ஆகியவை தங்கள் ஸ்மார்ட்போன்களில் காப்புரிமை பெற்ற 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகப் பல ஆண்டுகளாக நோக்கியா வாதிட்டு வந்தது.
இந்த காப்புரிமைகளுக்கு நிறுவனங்கள் பணம் செலுத்தாததால், இந்த சிக்கலைச் சரிசெய்யும் வரை விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று நோக்கியா நீதிமன்றத்தில் வாதிட்டது. தற்போது நோக்கியாவின் பக்கம் ஜெர்மன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, இந்த விற்பனை தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இனி சட்டப்பூர்வமாக Oppo மற்றும் OnePlus அதன் காப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நோக்கியாவிற்கு பணம் செலுத்திய பிறகு தான் விற்பனையைத் துவங்க முடியும்.
இந்த இரண்டு நிறுவனங்களும் நோக்கியாவிற்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்க, எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களில் இருந்து அந்த குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மட்டும் அகற்றலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இப்போது எழுந்துள்ள விற்பனை தடை தொடரும் என்பதே உண்மை. இதனையடுத்து மேலே குறிப்பிட்டுள்ளபடி, Oppo மற்றும் OnePlus ஜெர்மனி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு ஜெர்மனிக்கு மட்டும் பொருந்தாது. ஜெர்மனி முன்னோடியாக இருப்பதால் மற்ற நாடுகள் நோக்கியாவை ஆதரிக்கலாம். Oppo மற்றும் OnePlus ஐரோப்பா முழுவதும் விற்பனைக்குத் தடை வந்தால், நிறுவனங்கள் மிகப்பெரிய சிக்கலைச் சந்திக்கவேண்டியிருக்கும். இந்தியாவில் இந்த இரண்டு பிராண்ட்களுக்கும் மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால், இந்நிறுவனங்கள் சில முன்னெச்சரிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.