
OnePlus 11 ஸ்மார்ட்போனில் ஒரு முக்கியமான அம்சத்தை சேர்த்துள்ளது! அதென்ன அம்சம்? ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? அது வேறு என்னென்ன அம்சங்களைக் கொண்டு இருக்கும்? என்ன விலை? விரிவாக பார்க்கலாம்!
சிப்செட்
விரைவில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 கொண்டு இயங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட், இந்த வார தொடக்கத்தில் ஹவாயில் நடந்த குவால்காம் நிறுவனத்தின் Snapdragon Summit 2022-ல் தான் வெளியிடப்பட்டது.
முக்கிய அம்சம்!
ஒன்பிளஸ் வெளியிட்டுள்ள ஒரு டீஸர் போட்டோவில் – “ஒன்பிளஸ் 11 என்பது இரண்டாம் தலைமுறை ஸ்னாப்டிராகன் 8 மொபைல் பிளாட்ஃபார்ம் உடன் பொருத்தப்பட்ட முதல் பேட்ச் ஆகும். மேலும் மொபைல் போன்களுக்கான ‘ரே டிரேசிங்’கும் (Ray tracing) திறந்து விடப்படும்! என்று குறிப்பிட்டுள்ளது.
Ray tracing என்றால் வீடியோ கேம்களில் உள்ள ஹை-எண்ட் கிராபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்தும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். கேமிங் கன்சோல்கள் மற்றும் கணினிகளில் கிடைக்கும் Ray tracing ஆனது குவால்காமின் புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் மூலம் முதல் முறையாக ஸ்மார்ட்போன்களுக்கும் வருகிறது!
பிற அம்சங்கள்
ஒன்பிளஸ் மட்டுமின்றி சியோமி, மோட்டோரோலா, ஒப்போ, விவோ, ஐக்யூ, ரியல்மி, நுபியா, ஹானர், சோனி மற்றும் Asus போன்ற பிராண்டுகளும் கூட குவால்காமின் இந்த லேட்டஸ்ட் சிப்செட்டை தங்களது ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த உள்ளன. ஆனால், Snapdragon 8 Gen 2-ஐ கொண்டு வெளிவரும் முதல் சில ஸ்மார்ட்போன்களில் ஒன்பிளஸ் 11 மாடலும் இடம்பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
எப்போது அறிமுகம்?
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை பொறுத்தவரை, இரண்டு வகையான தகவல்கள் உள்ளன. சில தகவல்கள் இது அடுத்த மாதம், அதாவது டிசம்பர் மாதம் முதல் வாரமே அறிமுகம் ஆகும் என்கிறது. இன்னொரு தகவல், ஒன்பிளஸ் 11 ஆனது அடுத்த ஆண்டு (2023) தொடக்கத்தில் தான் அறிமுகமாகும் என்கிறது. இருப்பினும், Xiaomi, Motorola, Oppo மற்றும் iQOO போன்ற நிறுவனங்களுடனான போட்டி காரணமாக இது கூடிய விரைவில் அறிமுகமாகும் என்பது மட்டும் உறுதி!
அம்சங்கள்
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் ஆனது QHD+ ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும் 6.7 அங்குல அளவிலான AMOLED டிஸ்ப்ளேவுடன் வரலாம். கேமராக்களை பொறுத்தவரை, இதில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு சென்சார் + 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கலாம்.
என்ன விலை?
16GB வரையிலான ரேம் மற்றும் 512GB அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், Android 13 ஓஎஸ் அடிப்படையிலான OxygenOS 13 ஓஎஸ், 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களுடன் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் சரியான விலை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை! இருப்பினும் இது ரூ.50,000 என்ற விலை பிரிவில் வெளியாகும் என்று தெரிகிறது.