
ஒன்ப்ளஸ் ஏஸ் 2 போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இது ரியல்மி ஜிடி நியோ 5 மற்றும் ரெட்மி கே60 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் Ace 2 போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் இந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் ஆனது OnePlus 11R எனும் பெயரில் அறிமுகமாகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைனில் கசிந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஸ்னாப்டிராகன் சிப்செட்
ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனில் கேமிங் பயன்பாடுகளுக்குத் தகுந்தபடி குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்மை கேமரா
அதேபோல் இந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX890 மெயின் கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் அறிமுகமாக இருக்கிறது. எனவே இந்த போன் உதவியுடன் சிறந்த, துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
செல்ஃபி கேமரா
மேலும் செல்ஃபி புகைப்படங்களுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இந்த ஒன்பிளஸ் Ace 2 மொபைலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
டிஸ்பிளே
ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போனில் 6.7 அங்குல Fluid AMOLED டிஸ்பிளே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு ஒன்ப்ளஸ் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
மெமரி
ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
பாஸ்ட் சார்ஜிங்
விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரியோடு வெளியாகும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். கூடவே 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் விலை
டூயல் சிம் ஆதரவு, 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் Ace 2 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் வெளியீட்டு தேதி பற்றி இன்னும் தகவல் எதுவும் இல்லை. ஆனால், விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.