இந்தியாவில் எந்த மொபைல் ப்ராண்ட் டாப்?


இந்தியாவில் OnePlus, Samsung, Vivo, Oppo என்று என்று பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன. இதில் எந்த பிராண்ட் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக தயாரிப்புகளை விற்பனை செய்து தனக்கென்று ஒரு பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளது என்பதைத் தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

இந்தியாவில் அதிகம் பிரபலமடைந்த ஸ்மார்ட்போன் பிராண்ட் எது என்று கேட்டால், என்ன சொல்வீர்கள்? நமக்குத் தெரிந்து பெரும்பாலானோர், சாம்சங் நிறுவனம் என்றோ, விவோ என்றோ கூறுவோம், அல்லது இன்னும் சிலர் ஷோவ்மி தான் கம்மி விலையில் அட்டகாசமான தயாரிப்புகளை வழங்குகிறது என்று சொல்வார்கள்.

ஆனால், இந்தியாவில் நீங்கள் நினைத்த எந்த பிராண்டும் முன்னிலையில் இல்லை என்பது தான் உண்மை. இந்தியாவில் அதிகமாகப் பிரபலமடைந்து, மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த பிராண்ட் ஆக OnePlus இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? முன்னணி நிறுவனங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ஒன்பிளஸ் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறதா என்று நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனாலும், இது தான் உண்மை.

ஒன்பிளஸ் நிறுவனம் தான் இந்தியாவில் அதிக பிரபலமடைந்த நிறுவனமாக உருமாறியுள்ளது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட MSP ரிப்போர்ட் விபரங்கள் குறிப்பிடுகிறது. MSP ஸ்மார்ட்போன் நுகர்வோர் அறிக்கையின்படி, OnePlus நிறுவனம் 2022 இன் முதல் பாதியில் இந்தியச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக OnePlus நிறுவனம் மிட்ரேஞ்ச் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவுகளில் வெற்றியைக் கண்டுள்ளதாக அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ஒன்பிளஸ் 10R (OnePlus 10R) மற்றும் ஒன்பிளஸ் 10 ப்ரோ (OnePlus 10 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களின் மூலம் OnePlus பிராண்ட் பெரும் ஆதிக்கத்தை இந்தியாவில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. OnePlus நிறுவனத்தைத் தொடர்ந்து இந்தியாவில் சாம்சங் மற்றும் விவோ ஆகியவை நெருக்கமாகப் பட்டியலில் பின்தொடருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
முதல் ஐந்து பிராண்டுகள் பட்டியலில் Oppo மற்றும் Xiaomi போன்றவையும் இடம்பெற்றுள்ளன. Xiaomi இன் 12 ப்ரோ பிரீமியம் ஸ்மார்ட்போன் சிறப்பாகச் செயல்பட்டு, ரூ. 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட விலை புள்ளியில் மிகவும் பிரபலமான பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலாக வெற்றிகரமாக மாறியுள்ளது. ஒன்பிளஸ் குறிப்பாக மிட்ரேஞ்ச் மற்றும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவுகளில் போட்டியை மிஞ்சியுள்ளது என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

பிரபல சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான OnePlus, 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் அட்டகாசமான செயல்திறனுடன் முதலிடத்திற்கு வந்துள்ளது. OnePlus 28.5 சதவீதத்துடன் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரையிலான விலைப் பிரிவு தயாரிப்புகளில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆக மாறியுள்ளது. இதே விலைப் பிரிவின் கீழ் சாம்சங் நிறுவனம் 28.1 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

MSP வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்த மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், ஒவ்வொரு விலை வரம்பிலும் (ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரை) ஒன்பிளஸ் சாதனம் பிரபலத்தின் அடிப்படையின் பிரிவில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக உள்ளது என்பது தான் வியப்பு. ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை பிரிவில் OnePlus 10R மற்றும் ரூ. 40,000 முதல் ரூ. 50,000 வரை பிரிவில் OnePlus 9RT மாடல் அதிக பிரபலத்தை உருவாக்கியுள்ளது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ ரூ. 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வகையைக் கருத்தில் கொள்ளும்போது இரண்டாவது இடத்தில் வருகிறது. இத்துடன் ஒப்பிடுகையில் Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் குறைவாகப் பதிவாகியுள்ளது. இது ரூ. 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட வகைகளில் விலையுயர்ந்த மிகவும் பிரபலமான பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக மாறியுள்ளது. Xiaomi 12 Pro மற்றும் OnePlus 10 Pro இரண்டும் Samsung S22 Ultra , Vivo X80 Pro 5G மற்றும் Vivo X80 5G ஆகியவற்றை விட மிகவும் பிரபலமானதாக இருக்கிறது.

ஒன்பிளஸ் பிராண்ட் பிரபலமடைந்ததற்கு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ‘நம்பகமான பிராண்ட்’ என்ற அடிப்படையில் பார்க்கும் போது, ஆப்பிளுக்கு அடுத்தபடியாக ஒன்பிளஸ் நிறுவனம் தான் பட்டியலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.