
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OnePlus ஜூன் அல்லது ஜூலை நடுப்பகுதியில் OnePlus Nord 3 5G மொபைலை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட்போன் TUV ரைன்லேண்ட், சீனா தர சான்றிதழ் மையம் (CQC), IMDA சிங்கப்பூர் மற்றும் இந்திய BIS சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இந்த மொபைல் விரைவில் வெளியாகும் என்பது உறுதியாகிறது. Oneplus நிறுவனம் சமீபத்தில் OnePlus Ace 2V என்ற போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது வெளியாக இருக்கும் OnePlus Nord 3 ஸ்மார்ட்போன், இந்த போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
OnePlus Nord 3 5G receives the TUV certification, China Quality Certification Center (CQC) certification, and Indian BIS certification.#OnePlus #OnePlusNord3 pic.twitter.com/GnApyUfrNm
— Mukul Sharma (@stufflistings) March 29, 2023
OnePlus Nord 3 ஆனது OnePlus Nord 2 உடன் ஒப்பிடும்போது மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே மற்றும் சக்திவாய்ந்த சிப்செட்டைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . ட்விட்டரில், இந்த மொபைலின் சான்றிதழ்களை டிப்ஸ்டர்கள் முகுல் சர்மா மற்றும் சுதன்ஷு ஆம்போர் ஆகியோர் பகிர்ந்துள்ளனர். அவற்றின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் இந்த மொபைலின் அம்சங்களைக் கீழே காணலாம்.
OnePlus Nord 3 5G with model no CPH2493 has received its first certification from IMDA Singapore.#OnePlusNord3 pic.twitter.com/2UvIt9S2g5
— Sudhanshu Ambhore (@Sudhanshu1414) March 29, 2023
TUV Rheinland சான்றிதழ் CPH2491 என்பது OnePlus Nord 3 மாதிரி எண் என்பதைக் காட்டுகிறது. CPH2941 தயாரிப்பு எண் வரவிருக்கும் OnePlus Nord 3 5G இன் இந்திய பதிப்புடன் ஒத்துப்போகிறது என்பதை BIS சான்றிதழ் வெளிப்படுத்தியது. இதற்கிடையில், IMDA சிங்கப்பூரின் பட்டியலில் வெளியான மாடல் எண் CPH2493 கொண்ட மொபைலும் OnePlus Nord 3 5G ஸ்மார்ட்போனின் அம்சங்களைக் கொண்டு இருந்தது. இந்த CQC சான்றிதழ் மூலம் இந்த மொபைலில் 5G, ப்ளூடூத், Wi-Fi மற்றும் NFC ஆகிய அம்சங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதே போல் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருப்பது தெரிய வந்துள்ளது.
OnePlus Nord 3 5G (எதிர்பார்க்கப்படும்) விவரக்குறிப்புகள்
வரவிருக்கும் OnePlus Nord 3 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.72 அங்குல FHD+ AMOLED டிஸ்ப்ளேவை வழங்கக்கூடும். கேமராவைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரதான கேமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கக்கூடும். செல்ஃபிக்களுக்கு, OnePlus Nord 3 5G 16MP செல்ஃபி ஷூட்டரைக் கொண்டிருக்கலாம்.
டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவும் சுட்டிக்காட்டியுள்ளதபடி, வரவிருக்கும் ஃபோன் MediaTek Dimensity 9000 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். மேலும், 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5,000mAh பேட்டரியைக் கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
OnePlus Nord 3 முக்கிய விவரக்குறிப்புகள்
சிப்செட் – மீடியாடெக் டைமன்சிட்டி 9000 MT6983
ரேம் – 8 ஜிபி
திரை – 6.5 அங்குலம் (16.51 செமீ)
பின் கேமரா – 50 எம்பி + 8 எம்பி + 2 எம்பி
செல்ஃபி கேமரா – 16 எம்.பி
பேட்டரி – 4500 mAh






