இந்தியாவில் ஜூலையில் அறிமுகம் ஆகிறது OnePlus Nord 3

Highlights

  • OnePlus Nord 3 உலகளாவிய வெளியீடு ஜூலை மாதம் நடைபெறும்.
  • நிறுவனம் அதன் social media post மூலம் வெளியீட்டை டீஸ் செய்தது.
  • Nord 3 ஆனது சீனாவின் Ace 2V மொபைலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கலாம்

OnePlus நிறுவனம் அதன் அடுத்த Nord சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டின் முதல் Nord ஸ்மார்ட்போனாக Nord CE 3 Lite 5G ஐ அறிமுகப்படுத்தியது. அடுத்து, ஒன்பிளஸ் இந்தியாவில் Nord 3 ஐ அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் அடுத்த Nord ஸ்மார்ட்போன் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. OnePlus மொபைலின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும், community forumல் உள்ள டீஸரானது, இந்தியா, ஐரோப்பா மற்றும் APAC பிராந்தியங்களில் Nord 3 அறிமுகம் செய்யப்படுவதைக் குறிக்கிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் நார்ட் 3-ஐ இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய விவரங்களின் அடிப்படையில், Nord 3 இந்தியாவில் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. OnePlus அதன் “The Lab” பிரச்சாரத்தின் கீழ் Nord 3 இன் வெளியீட்டை டீஸ் செய்தது. இது “தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு தொழில்நுட்ப கேஜெட்கள் மீது ஆழமான புரிதல் மற்றும் ஆர்வத்தை” வழங்குகிறது.

ஒன்பிளஸ், campaign’s timelineஐ வெளிப்படுத்தி இருக்கிறது. இது இதன் ரிவ்யூஸ்  ஜூலையில் நேரலையில் இருக்கும் என்பதைக் காட்டுகிறது. இந்தியாவில் Nord 3 மொபைலின் சரியான வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த மொபைல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

OnePlus Nord 3 ஆனது சீனாவில் உள்ள மற்றொரு OnePlus ஸ்மார்ட்போனின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். அறிக்கைகளின்படி , இந்த மொபைல் ஒன்பிளஸ் ஏஸ் 2V மொபைலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக உலகளவில் அறிமுகப்படுத்தப்படும். ஒன்பிளஸ் இரண்டு சேமிப்பக விருப்பங்களுடன் Nord 3 ஐ அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. அடிப்படை மாடல் 128 ஜிபி சேமிப்பகத்தை கொண்டிருக்கும். அதேசமயம் டாப் வேரியண்ட் சேமிப்பக விருப்பம் 256 ஜிபி நினைவகத்தைக் கொண்டிருக்கும். இரண்டு வகைகளும் ஐரோப்பாவில் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்று ஒரு கசிவு தெரிவிக்கிறது. 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய மொபைலின் அடிப்படை மாடலின் விலை யூரோ 449 (தோராயமாக ரூ. 39,900). அதேசமயம் 16 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு விருப்பம் யூரோ 549 (தோராயமாக ரூ. 48,800) விலையில் இருக்கலாம். இந்தியாவில், அடிப்படை மாடலின் விலை ரூ.35,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் 256ஜிபி மாறுபாடு ரூ.40,000க்குள் வெளியிடப்படலாம்.

ஏஸ் 2வி சீனாவில் ஒன்பிளஸின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது MediaTek Dimensity 9000 SoC, 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சீனாவில் உள்ள இந்த மொபைல் 64MP டிரிபிள்-கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. இருப்பினும், உலகளாவிய மாறுபாடு வேறுபட்ட சென்சாரைக் கொண்டிருக்கும். பிப்ரவரி 2023 இல் Nord 3 இன் விவரக்குறிப்புகளை நாங்கள் வெளிப்படுத்தினோம். இந்தியாவில் வெளியாக இருக்கும் இந்த OnePlus Nord 3 விவரக்குறிப்புகள், அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை இப்போது பார்க்கலாம்:

  • டிஸ்ப்ளே: 6.74-இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன் 2772 x 1240 பிக்சல்கள், பிளாட் டிஸ்ப்ளே, முன் கேமராவிற்கு மேல் மையத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவை வழங்குகிறது.
  • சிப்செட்: MediaTek Dimensity 9000 SoC.
  • ரேம்/ ஸ்டோரேஜ் : 8ஜிபி/16ஜிபி ரேம், 128ஜிபி/256ஜிபி சேமிப்பு.
  • பேட்டரி & வேகமான சார்ஜிங் : 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி.
  • பின்புற கேமரா : 50MP முதன்மை கேமரா சென்சார், 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ சென்சார்.
  • முன் கேமரா : 16MP
  • மென்பொருள் : ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்ஸிஜன் OS 13
  • மற்ற விவரக்குறிப்புகள் : இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், எச்சரிக்கை ஸ்லைடர், IR பிளாஸ்டர், 5G போன்றவை.